சென்னை, நவ. 27- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் சமூகநீதிக் கண்காணிப்புக் குழு அமைக் கப்பட்டது. தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் ஆய்வு மேற்கொண்டு அவ்வாய்வு முடிவுகளை அரசுக்கு அளிக்கும் பொறுப்புக் குழுவுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சமூகநீதிக் கண்காணிப்புக் குழுவின் 5ஆவது கூட்டம் 21.11.2022 அன்று சென்னை, அண்ணா சாலை, தேவநேயப் பாவாணர் கட்டடத்தின் இரண்டாவது தளத் தில் உள்ள சமூகநீதிக் கண்காணிப்புக் குழு அலுவலகத்தில் குழுவின் தலைவர் முனைவர் சுப.வீரபாண்டியன் தலை மையில் நடைபெற்றது.
சமூகநீதிக் கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் அறிவியல் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக் கழகம் ஆகிய 6 பல்கலைக்கழகங்களில் 2022 டிசம்பர் மாதத்திற்குள் சமூகநீதிக் கண்காணிப்புக் குழு ஆய்வு மேற்கொள்வதென முடிவுசெய்யப்பட்டது.
No comments:
Post a Comment