அய்தராபாத்,நவ.27 மாநிலங்கள் நிறைவேற்றும் சட்டங்களை ஆளுநர் ஒப்புதல் தருவதற்கான கால வரையறையைச் செய்ய வேண்டும். இதன் மூலம் ஆளுநர் மசோதாக்களுக்கு ஒப்புதல் தர மாநிலங்கள் கெஞ்சிக்கொண்டு இருக்கத் தேவையில்லை. என்று மேன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும் மற்றும் சட்ட ஆணையத்தின் தலைவரு மான பி.பி. ஜீவன் ரெட்டி ஆலோசனை கூறியுள்ளார்.
தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் இந்திய அரசமைப்புச் சட்ட நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் உச்சநீதிமன்ற மேன்னாள் நீதிபதியும் மற்றும் சட்ட ஆணையத்தலைவருமான பி.பி.ஜீவன் ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
காலவரையறை
”சட்டமன்றங்களில் மக்களின் நலனுக்காக பல மசோதாக்களை நிறை வேற்றி குடியரசுத்தலைவரின் ஒப்பு தலைப் பொறுவதற்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கின்றனர். ஆனால் ஆளுநர் அதனை குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தி வருகிறார்.
நமது அரசமைப்புச் சட்டத்தில் பெருந்தன்மை மற்றும் நேர்மை அடிப் படையில் சில நடவடிக்கைகளுக்கு கால நிர்ணயம் செய்யப்படவில்லை. ஒரு நல்ல நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றங்களின் நடைமுறை, அதனை நிறைவேற்றுபவர்களுக் கிடையே உள்ள நல்லெண்ணம் மற்றும் பெருந் தன்மையான உறவுகள் காரணமாக, சிறந்த எடுத்துக் காட்டுகளாக இருக்கட்டும் என்று காலவரையறை செய்யவில்லை. ஆளுநர்கள் தங்களிடம் வரும் மாநில சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாக்களை மறுபரிசீலனைக்காக திருப்பி அனுப்பலாம், அந்த மசோதாக்கள் எந்த மாற்றமும் இன்றி மீண்டும் அனுப்பப்பட்டால் அதை ஆளுநர்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியே ஆகவேண்டும்'' என்று கூறிய அவர்,
”மாநிலங்களால் ஆளுநருக்கு அனுப் பப்படும் மசோதாக்கள் குடியரசுத்தலைவரின் ஒப் புதல் பெற காலவரையறை செய்யவேண்டும், அதற் கான தனி மசோதாவை நிறைவேற்றவேண்டும்” என்று கூறினார்.
மேலும் தனது அனுபவம் குறித்து பேசும் போது
”மாநில அரசால் பதவியில் அமர்த்தப்பட்ட பல்கலைக் கழக துணை வேந்தர்களை நீக்கம் செய்ய வேண்டும்” என்று ஆளுநர் வலியுறுத்திய நிலையில் உச்சநீதிமன்றம் இதில் தலையிட்டு மாநில அரசுகள் தான் இந்த முடிவை எடுக்கவேண்டும் அல்லது மாநில அரசுகள் உச்சநீதி மன்றம் மூலம் தீர்வைப் பெறவேண்டும்'' என்று கூறினார்.
அட்டர்னி ஜெனரல் பி.எஸ்.பிரசாத், மற்றும் தெலங்கானா உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment