முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி!
சென்னை, நவ.17- தேசிய பத்திரி கையாளர் தினத்தையொட்டி முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், அறம் சார்ந்து செயல்படும் இதழியலாளர் களுக்கு தேசிய பத்திரிகையாளர் தின நாளில் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்த, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ள தாவது:
‘‘அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று சொல்லாமல், உண்மை எது என்று மக்களுக்குச் சொல்வதே இதழி யலின் அறம்! அறம் சார்ந்து செயல்படும் இதழியலாளர்களுக்கு தேசிய பத்திரி கையாளர் தின வாழ்த்துகள்!
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.''
-இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் சமூக வலைதளப் பதிவில் குறிப் பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment