தஞ்சை, நவ.6 பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர் நிலை பல்கலைக் கழகம்) சார்பில் வருகின்ற நவம்பர் 8,9,10 ஆகிய மூன்று தினங்களில் பல்கலைக் கழகத்தின் உள்விளையாட்டு அரங்கில் மாணவர்களின் திறனை மேம்படுத்தும் திறந்த வெளி “கூடகாட்சி” நிகழ்வு துணைவேந்தர் எஸ்.வேலுசாமி தலைமையில் நடைபெற உள்ளது.
இந்த கண்காட்சியில் தஞ்சை, திருவாரூர், அரியலூர், பட்டுக்கோட்டை மற்றும் ஜெயங் கொண்டம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களுடைய அரிய திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர். இந்த நிகழ்வில் வெற்றி பெற உள்ள மாணவ மாணவிகளுக்கு ரூபாய் ஒரு லட்சம் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்படும். இந்த நிகழ்வை கண்டு களித்து பயன்பெறுமாறு பல்கலைக்கழகத்தின் சார்பில் பதிவாளர் பேராசிரியர் பி.கே.சிறீவித்யா அழைக்கிறார்.
No comments:
Post a Comment