வடகிழக்கு பருவமழையையொட்டி சென் னையில் ‘மெட்ராஸ் அய்’ என்னும் கண் பாதிப்பு நோய் கணிசமாக உயர்ந்து வருகிறது. இதற்காக, மக்கள் நல்வாழ்வுத் துறை தரப்பில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட உள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக பல் வேறு உடல் சார்ந்த நோய்கள் வரத் தொடங்கி யுள்ளன. இதுபோன்ற காலகட்டங்களில் ‘மெட்ராஸ் அய்’ என்று அழைக்கப்படும் கண் வெண்படல அழற்சி நோய் சென்னையில் வேகமாக அதிகரித்து வருகிறது. மேலும், குழந்தைகள் மற்றும் சிறார்களுக்கு இந்த நோய் எளிதில் பரவி வருகிறது. மேலும், எப்பொழுதும் மழை பருவ காலங்களில் மெட்ராஸ் அய் பாதிப்பு என்பது வரக்கூடிய ஒன்றாக இருந் தாலும், இந்தாண்டு மழைப் பொழிவு காலம் நீடித்திருப்பது இதன் பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக உயர்த்தி வருகிறது.
இதுகுறித்து எழும்பூர் கண் மருத்துவ மனையின் இயக்குநர் பிரகாஷ் கூறியிருப்ப தாவது: 2 ஆண்டுகளாக கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தில் மக்கள் தனிமனித இடைவெளியை கடைப் பிடித்தும், சுத்தமாகவும், சுகாதாரத்துடனும் இருந்து வந்தனர். ஆனால் அதன் எண்ணிக்கை குறைந்ததன் காரணமாக பல்வேறு வழிமுறை களை பின்பற்றாமல் இருந்த காரணமாக தான் தற்போது "மெட்ராஸ் அய்" தாக்கம் என்பது சற்று கணிசமாக உயர்ந்து வருகிறது. மேலும், கண் வெண்படல அழற்சி அல்லது "மெட்ராஸ் அய்" ஒரு நபரிடமிருந்து மற்றொருவருக்கு வேகமாக பரவுகின்ற ஒரு பொதுவான நோய் பாதிப்பாகும். இது பெரும்பாலும் வைரஸ் தொற்றின் காரணமாக கண்களில் உள்ள ரத்த நாளங்கள் விரிவடைகின்றன. கண்ணிலிருந்து சுரக்கும் திரவங்களின் வழியாக கண் வெண் படல அழற்சியால் இவை பரவுகின்றன.
மேலும், ஒரு நபருக்கு இந்த நோய் இருக்கும் பட்சத்தில் அவர் கண்களில் கை வைத்த பிறகு மற்றொரு இடத்திலோ, பொருட்கள் மீதோ கை வைத்தால் நோய் பாதிக்காத நபர் அங்கு அந்த பொருட்களை பயன்படுத்தினால் அவருக்கு எளிதில் வைரஸ் பரவி விடுகிறது. இருப்பினும், ஒவ்வாமையினால் ஏற்படும் கண் வெண்படல அழற்சி மற்றும் வேதிப்பொருட்கள் அல்லது எரிச்சலூட்டிகளினால் வரக் கூடிய கண் அழற்சி ஒரு நபரிடமிருந்து, மற்றொரு நபருக் குப் பரவுவதில்லை. மேலும், இன்று (7.11.2022) முதல் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக் காக எழும்பூர் கண் மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில் தனியாக சிறப்பு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை மாநகராட்சி சார்பில் அனைத்து வார்டுகளிலும் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமில் இது போன்ற கண் தொடர்பான நோயினால் பாதிக் கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அதனையும் பயன் படுத்தி பயனடைந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மெட்ராஸ் அய் பாதிப்பு அறிகுறிகள்
* கண் எரிச்சல், நீர் வடிதல், கண் சிவத்தல், கண்ணிலிருந்து அழுக்கு வெளியேற்றம் மற் றும் வெளிச்சத்தைப் பார்க்க கூச்சம், கண்ணில் அரிப்பு.
* "மெட்ராஸ் அய்" பாதிக்கப்பட்டால் மருத் துவரால் பரிந்துரைக்கப்படும் ஆன்ட்டி பயாட்டிக் மற்றும் கண் சொட்டு மருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அந்த வகையில் 95% பேருக்கு இந்த நோய் எளிதில் குணமடைந்து விடும்.
* கண் வெண்படல அழற்சிகள் என்பது அடினோவைரஸ் என்பதால் ஏற்படுகிறது. இதனால் பாதிக்கப்படும் கண் சிவந்து, அரிப்பும், எரிச்சல் தன்மையும் உள்ளதாக மாறுகிறது.
* ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு தொற்றிக் கொள்ளும் தன்மை கொண்ட இந்த வைரல் தொற்று, சில நோயாளிகள் மத்தியில் கண் வீக்கம் மற்றும் அழற்சியை ஏற்படுத்து கிறது. இப்பாதிப்புகள் குணமாவதற்கு அவர் களுக்கு நீண்டகாலம் கூட ஆகலாம். கண் வெண்படல அழற்சி என்பது, பொதுவாக ஒரு சிறிய கண் தொற்றாக இருக்கிறபோதிலும் அதை சரியாக பரிசோதனையில் உறுதிசெய்து உடனடியாக சிகிச்சையளிக்க வேண்டும்.
பாதிப்புக்குள்ளானவர்கள்
செய்யக் கூடியவை
* டவல், தலையணை உறை மற்றும் ஒப்பனைப் பொருட்களை தனியாக வைத்து கொள்ள வேண்டும்.
* கைக் குட்டை உள்பட அடிக்கடி பயன்படுத்தக் கூடாது.
* கைகளை அடிக்கடி கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.
* தங்களது பொருட்களை பிறர் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது.
* கண்ணீர் திரவச் சுரப்பு நிற்கும்வரை வெளியிடங்களுக்கு செல்லக் கூடாது.
No comments:
Post a Comment