புதுடில்லி, நவ.1 காப்பீடு சார்ந்த சேவைகளை ‘பீமா சுகம்’ என்ற ஒரே வலைதளத்தில் வழங்குவ தற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப் பட்டு வருவதாக காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய (அய்ஆர்டிஏஅய்) தலைவர் தெபாசிஷ் பாண்டா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ‘‘இணையவழி பணப் பரிவர்த்தனை யில் யுபிஅய் தொழில்நுட்பம் பல்வேறு தாக்கங் களை ஏற்படுத்தியதைப் போல காப்பீட்டுத் துறை யில் ‘பீமா சுகம்’ வலைதளம் பல மாற்றங்களை ஏற்படுத்தும். அந்த வலைதளத்தின் மூலமாக காப் பீட்டு விற்பனை, புதுப்பித்தல், காப்பீட்டுத் தொகையை வழங்குதல் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் பெற முடியும்.
நாட்டில் பலதரப்பட்ட மக்களுக்கு காப்பீட்டின் பலனைக் கொண்டு செல்வதற்கு இந்த வலைதளம் உதவும். காப்பீடுதாரர்கள் இடையூறற்ற சேவை களைப் பெறவும் வலைதளம் உதவும். காப்பீட்டு நிறுவனங்களும் இந்த வலைதளத்தைப் பயன்படுத் திக் கொள்ள முடியும்.
காப்பீடுகளை விற்பனை செய்வோர், இடைத் தரகர்கள் உள்ளிட்டோருக்கும் வலைதளப் பயன் பாட்டுக்கு அனுமதி வழங்கப்படும். காப்பீடு வாங் குவதற்கான உதவிகளும் வாடிக்கையாளர்களுக்கு இந்த வலைதளம் வாயிலாக வழங்கப்படும். பல் வேறு வகை காப்பீடுகள், காப்பீடுகளை வழங்கும் நிறுவனங்கள், பணம் செலுத்துவதற்கான பல்வேறு முறைகள் உள்ளிட்டவற்றை இந்த வலைதளத்தின் வாயிலாக வாடிக்கையாளரே தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும்’’ என்றார்.
No comments:
Post a Comment