டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடோ யாத்ரா’ அமைதிப் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே.
* தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலகக் கோரி மதசார்பின்மை இயக்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தல்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* நாட்டைப் பற்றி சாவர்க்கர் பார்வை இனம்-மதம் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக ஹிந்துக்களைப் பாதுகாப்பதில் அவரது கவனம் இருந்தது, அதற்காக அவர் ஆங்கிலேயர்களுடன் ஒத்துழைத்தார். மாறாக, காந்தி-நேரு சுதந்திரமான, பன்முக கலாச்சாரம் மற்றும் மதச்சார்பற்ற இந்தியாவுக்காக, அனைத்து சமூகங்களும் சமமாக வாழ வேண்டும் எனப் போராடினார்கள் என பேராசிரியர் கிறிஸ்டபர் ஜாப்ரலெட் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பெண் பத்திரிகையாளர் பொட்டு ('பிண்டி') அணியாததால் அவருடன் பேச முடியாது என சங் பரிவார் கூட்டத்தைச் சேர்ந்த சம்பாஜி பிடே பேச்சு. ஒரு பெண் பாரத மாதாவுக்கு நிகரானவள் என்றும், பொட்டு (பிந்தி) அணியாமல் ஒரு விதவையை போல் தோன்ற கூடாது என்றும் கூறினார்.
தி டெலிகிராப்:
* வங்கத்தில் குடியுரிமை திருத்த மசோதாவை அமல்படுத்த ஒன்றிய அரசை அனுமதிக்க மாட்டோம். அடுத்து வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்காகத்தான் குஜராத்தில் பாஜக அதை வைத்து விளையாடுகிறது: என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா சாடல்.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment