தனியார் நிறுவனங்களில் ஒரு லட்சம் பேருக்கு வேலை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 4, 2022

தனியார் நிறுவனங்களில் ஒரு லட்சம் பேருக்கு வேலை

திருச்சி, நவ.4 திருச்சி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மய்யம் இணைந்து வருகிற 5-ஆம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை நடத் துகிறது. திருச்சி எஸ்.அய்.டி. கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட உள்ள இந்த முகாமிற்கான முன் னேற்பாடு குறித்த ஆய்வுக் கூட் டத்தில் பங்கேற்ற தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணே சன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதி களிலும் வேலைவாய்ப்பு முகாம் நடத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஆண்டுக்கு ஒரு லட்சம் இளை ஞர்களுக்கு வேலை வாய்ப்பை முதலமைச்சர் பெற்று தருவார் என்ற நம்பிக்கை உள்ளது. 

தமிழ்நாட்டில் இதுவரை 66 இடங்களில் மெகா வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி 1 லட்சத்து 4 ஆயிரம் இளைஞர்களுக்கு தனியார் தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்று தரப்பட் டுள்ளது. கடந்த மாதம் 15-ஆம் தேதி சென் னையில் நடந்த விழாவில் ஒரு லட்ச மாவது பணி நியமன ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங் கினார். வருகிற 5-ஆம் தேதி திருச்சி யில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் குறைந்த பட்சம் 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு பெற்று தரப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


No comments:

Post a Comment