கட்டாயம்
அரசுப்பணி, ஓட்டுநர் உரிமம், கடவுச்சீட்டு, வாக்கா ளர் அட்டை உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கும் இனி பிறப்பு சான்றிதழ் கட்டாயமாக்கப்படவுள்ளதால், இது தொடர்பான சட்ட திருத்த மசோதாவை வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தில் தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டம்.
எட்டியது
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழையால் 3,795 பாசன ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியுள்ளதாக நீர்வளத் துறை தெரிவித்துள்ளது.
ஆய்வுகள்
தமிழ்நாட்டின் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்ய, மேலும் பல இடங்களில் தொல்லியல் ஆய்வுப் பணி களைத் தொடங்க வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு ஒன்றிய அரசுக்கு கோரிக்கை.
புதுப்பிப்பு...
தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 3,808 ஊரக நூலக கட்டடங்கள் ரூ.84.27 கோடியில் புதுப்பிக் கப்படுகிறது. அத்துடன் புதிய புத்தகங்கள், தளவாடங் களை வாங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment