'உள்நாட்டு அரசியலை வெளிநாட்டில் பேசுவதா?' பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 18, 2022

'உள்நாட்டு அரசியலை வெளிநாட்டில் பேசுவதா?' பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கண்டனம்

புதுடில்லி, நவ. 18 உள்நாட்டு அரசியலை வெளிநாட்டில் பேசுவதா என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.  பிரதமர் மோடி,  பாலித்தீவில் இந்தோனேசியா வாழ் இந்தியர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், "2014ஆ-ம் ஆண்டுக்கு முந்தைய, பிந்தைய இந்தியாவுக்கு இடையே பெரும் மாறுதல் ஏற்பட் டுள்ளது" என குறிப்பிட்டார். 

2014ஆம் ஆண்டுதான் மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தது, எனவே அதன்பின்னர் தான் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக உணர்த்தும் வகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். உள்நாட்டு அரசியலை வெளிநாட்டில் பேசியதற்காக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. 

இதுபற்றி அந்த கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிடுகையில், "நமது பிரதமர்கள் வெளிநாடுவாழ் இந்தியர்களிடம் உள்நாட்டு அரசியல், பாரபட்சம், தவறான எண் ணங்களை எடுத்துச்செல்வதில்லை என்பது நீண்ட கால பாரம்பரியம் ஆகும். இந்த ஆரோக்கியமான பாரம்பரியம், 2014 மே மாதத்துக்கு பிறகு (பா.ஜ.க. ஆட்சிக்கு பிறகு) உடைக்கப்பட்டு விட்டது" என கூறி உள்ளார்.



No comments:

Post a Comment