தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் புதிய முகவரியில் செயல்படும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 26, 2022

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் புதிய முகவரியில் செயல்படும்

சென்னை, நவ. 26- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சிக்கா தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், மாநில அளவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியினரின் சட்டப்பூர்வமான உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களுடைய முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் என்கிற புதிய அமைப்பு ஒன்றைத் தன்னாட்சி அதிகாரத் துடன் செயல்படும் வகையில் உருவாக்கிட உரிய சட்டம் இயற்றப்பட்டு, முதலமைச்சர் அவர்களால் சட்டமன்றப் பேரவையில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் 1.12.2022ஆம் தேதி முதல் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் புதிய முகவரியான 735, இரண்டாம் தளம், தேவநேயப் பாவாணர் மாவட்ட மய்ய நூலகக் கட்டடம், (எம்.எல்.ஏ. கட்டடம்), அண்ணா சாலை, சென்னை-600 002 என்ற முகவரியில் செயல்படும். ஆணை யத்தின் புதிய முகவரி மற்றும் மின்னஞ்சல் முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆணையத்தின் முகவரி:

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியினர் மாநில ஆணையம், 735 இரண்டாம் தளம், தேவநேயப் பாவாணர் மாவட்ட மய்ய நூலகக் கட்டம், (எம்எல்ஏ கட்டடம்), அண்ணா சாலை , சென்னை - 600 002. மின்னஞ்சல் முகவரி: tnscstcommission@gmail.com

No comments:

Post a Comment