அகமதாபாத்,நவ.24- குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட் டியிடும் பாஜக பிரமுகர்கள் 12 பேர் அக்கட்சியில் இருந்து தற் காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.
குஜராத் சட்டப்பேரவைக்கு டிசம்பர் 1, 5 ஆகிய தேதிகளில் 2 கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இரண்டு கட்ட தேர்தலுக்கான மனு தாக்கல், பரிசீலனை, மனு திரும்பப் பெறுதல் ஆகியவை முடிந்துள்ளன. முதல்கட்ட தேர்தலுக்கு இன்னும் 1 வாரமே உள்ளது.
இந்நிலையில் டிச.5ஆம் தேதி நடைபெறும் 2ஆம் கட்ட தேர் தலில் பாஜகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக போட்டியிடும் 12 பேர், கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப் படுவதாக மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீல் நேற்று அறிவித்தார். இவர்களில் 6 முறை எம்எல்ஏவாக இருந்த மது வத்சவ் மற்றும் 2 மேனாள் எம்எல்ஏக் களும் அடங்குவர்.
இரண்டாம் கட்ட தேர்தலில் வேட்பு மனுக்களை பெற நவம்பர் 21 கடைசி நாளாகும். எனினும் இவர்கள் தங்கள் வேட்பு மனுவை திரும்பப் பெறாததால் இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது.
டிச. 1ஆம் தேதி நடைபெறும் முதல்கட்ட தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் 7 பாஜகவினரை அக்கட்சி கடந்த சில நாட்களுக்கு முன் இடைநீக்கம் செய்திருந்தது.
இந்நிலையில் தற் போது மேலும் 12 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள்.
No comments:
Post a Comment