புதுடில்லி,நவ.24- உ.பி. வாரணா சியில் உள்ள காசிவிஸ்வநாதர் கோயில் அறக்கட்டளைக்கு தலை வர் மற்றும் 4 செயற்குழு உறுப் பினர்கள் என 5 நிர்வாகிகள் உள்ளனர். மூன்று வருட கால இப்பதவியில் முதல்முறையாக கே.வெங்கட்ரமண கனபாடிகள் என்பவர் நியமிக்கப்பட்டுள் ளார்.
தனது நியமனம் குறித்து, வெங் கட்ரமண கனபாடிகள் கூறிய தாவது: காசி விஸ்வநாதரை தரிசனம் செய்ய வருவோருக்கு உரிய வசதிகளை செய்து தருவது, வளர்ச்சிப் பணிகளை மேற்கொள் ளுதல் எங்கள் பணியாகும். காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடை பெறும் போது என்னை நியமனம் செய்த உ.பி. முதலமைச்சர் யோகிக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி.
கோயிலுக்கு வருபவர்களுக்கு ஹிந்தி மொழி அறியாத பிரச்சினை இல்லாதபடி, நன்கு தமிழறிந்த வழிகாட்டிகளை நியமிக்க விரும் புகிறேன்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த கலை ஞர்களின் இசை இக்கோயிலில் ஒலிக்க வேண்டும் என விரும்பு கிறேன். இசைஞானி இளையராஜா, டிரம்மர் சிவமணி, மாண்டலின் ராஜேஷ் உள்ளிட்ட அனைவரின் நிகழ்ச்சிகளையும் இங்கு நடத்த வேண்டும் என்பது எனது விருப்பம். விஸ்வநாதர் கோயிலில் அனைவருக்காகவும் ஒலிக்கும் எனது குரலில் தமிழர்களுக்கு முக் கியத்துவம் அளிப்பேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இவர், வாரணாசியின் அனுமர் படித்துறையில் வாழும் தமிழ் பேசும் பிராமணர்களில் அய்ந்தாவது தலைமுறையை சேர்ந்தவர்என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment