நவம்பர் ஒன்று மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாள் (1956) இது குறித்த சிந்தனைகள் சில:
ஜேவிபி, தார் போன்ற கமிஷன்களின் பரிந்துரையை ஏற்று இந்தியாவின் மாநிலங்கள் மொழிவாரியாகப் பிரிக்கப்படாமல், மூன்றுவகை மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசம் என நான்கு பிரிவுகள்கொண்ட மாகாணங்களாகவே செயல்படத் தொடங்கின. காங்கிரஸ் அரசின் இந்த முடிவால் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்கள் அதிருப்தியடைந்தனர். சொன்ன வார்த்தையைக் காப்பாற்ற காங்கிரஸ் தவறிவிட்டது எனக் கடுமையாக விமர்சித்தனர்
மொழியை அடிப்படையாகக் கொண்டு மாநிலங்களை பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகமாக உதித்தது. இதற்காக இந்திய அரசு 1953-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், நீதிபதி பசல் அலி தலைமையில் மாநிலங்கள் மறுசீரமைப்பு ஆணையம் (The States Reorganisation Committee) அமைத்தது.
ஃபசல் அலி கமிஷன் அளித்த அறிக்கையின் பரிந்துரைகளை ஏற்ற ஒன்றிய அரசு, அதில் சில மாற்றங்கள் செய்து, 1956-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தை இயற்றியது. அதனடிப்படையில் இந்தியா 14 மொழிவாரி மாநிலங்களாகவும், 6 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது.
இதில் ஆந்திர மாநிலக் கோரிக்கையை ஏற்பதாக பிரதமர் நேரு அறிவித்தார். இதையடுத்து, சுதந்திர இந்தியாவின் முதல் மொழிவாரி மாநிலமாக அக்டோபர் 1, 1953-ஆம் ஆண்டு பிறந்தது ஆந்திர மாநிலம்.ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்ட பின்னரும்கூட, 1956-ஆம் ஆண்டு `விசால ஆந்திரா’ போராட்டம் நடத்தப்பட்டு அய்தராபாத், தெலங்கானா உள்ளிட்ட பகுதிகள் ஆந்திராவோடு இணைக்கப் பட்டன. 1953-ஆம் ஆண்டு, டிசம்பர் மாத இறுதியில் உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி ஃபசல் அலி தலைமையில் கே.எம்.பணிக்கர், குன்ஸ்ரு உள்ளிட்டோரை உறுப்பினர்களாகக் கொண்ட `மாநில மறுசீரமைப்பு ஆணையம்’ அமைக்கப்பட்டது. நாடு முழுவதும் கள ஆய்வு மேற்கொண்ட இந்தக் குழு 1955-ஆம் ஆண்டு ஒன்றிய அரசிடம் விரிவான அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தது.
ஃபசல் அலி ஆணையம் அளித்த அறிக்கையின் பரிந்துரைகளை ஏற்று, அவற்றில் சில மாற்றங்களைச் செய்த ஒன்றிய அரசு, 1956-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், மாநில மறுசீரமைப்புச் சட்டத்தை இயற்றியது. அதனடிப்படையில்
இதனால் இந்திய ஒன்றிய அரசு வேறு வழியின்றி 1 நவம்பர் 1956-இல் இந்தியாவை மொழிவாரி மாநிலங்களாகப் பிரித்தது.
இதன்படி, சென்னை மாநிலத்திலிருந்த மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகள் பேசிய பகுதிகளைக் கொண்டு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், மைசூர் மாநிலங்கள் நிறுவப்பட்டன. சென்னை மாகாணத்தின் எஞ்சிய பகுதிகளும், திருவிதாங்கூரின் தமிழ் பகுதிகளும் இணைக்கப்பட்டு சென்னை மாநிலம் பிரிக்கப்பட்டது.
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு ஒன்றுபட்ட சென்னை மாநிலம், ஆந்திரா, கருநாடகா, கேரளா, தமிழகம் என தனித்தனியாகப் பிரிக்கப்பட்டன. அந்தந்த மொழி பேசும் மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதிகள் அந்த மாநிலங்களோடு இணைக்கப்பட்டன. ஆனால், தமிழகம் தனக்கு தார்மிக உரிமையுடன் பெற வேண்டிய பகுதிகளை மற்ற மாநிலங்களிடம் இழந்தது. அந்த அளவு 70,000 சதுர கிலோமீட்டர் எனக் கணக்கிடப்படுகிறது.
குறிப்பாக ஆந்திரா பிரிந்தபோது, சித்தூர், திருப்பதி, காளகஸ்தி என 32,000 ச.கி.மீ. பரப்பளவுகொண்ட பகுதிகள் பறிபோயின. ஆரம்பத்தில் `மதராஸ் மனதே’ என்று சென்னையை ஆந்திராவின் தலைநகராக்க வேண்டும் எனக் கூறி அந்த மாநிலத்தினர் உரிமைகொண்டாடியதும் உண்டு.
கருநாடகா மாநிலத்துக்குள்ளும் கொல்லேகால், மாண்டியா, கோலார் தங்கவயல் முதலான தமிழகத்துக்குச் சேர வேண்டிய பகுதிகள் அகப்பட்டுக்கொண்டன.இதேபோல் கேரளாவிலும், தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றங்கரை, நெடுமாங்காடு உள்ளிட்ட பகுதிகளை தமிழகம் இழக்க நேரிட்டது. மார்ஷல் நேசமணி, பி.எஸ்.மணி உள்ளிட்ட தமிழகத் தலைவர்கள் தெற்கெல்லை போராட்டத்தைத் தொடங்கினர். இந்தப் போராட்டத்தில் 11 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.தமிழகத்தில் தீவிரமடைந்த எல்லை மீட்புப் போராட்டத்தின் விளைவாக `படாஸ்கர் எல்லை ஆணையம்’ அமைக்கப்பட்டது.
ஆந்திராவிலிருந்து திருத்தணி உள்ளிட்ட சில பகுதிகள் மட்டும் தமிழகத்தோடு இணைக்கப்பட்டன. கேரளாவிலிருந்து கன்னியாகுமரி, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகள் இணைக்கப்பட்டன. ஆனால் தமிழகத்துக்குச் சேர வேண்டிய பெரும்பாலான பகுதிகள் இன்று வரையிலும் அண்டை மாநிலங்களுக்குள்ளாகவே அடைபட்டுக் கொண்டிருக்கின்றன. மேலும், அந்தப் பகுதிகள் மட்டும் இணைக்கப்பட்டிருந்தால், தமிழகத்துக்கான நதிநீர் பங்கீட்டுச் சிக்கலே தொடங்கியிருக்காது என்ற ஆதங்கம் தமிழுணர்வாளர் களிடையே உண்டு.
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, அதனைக் கடுமையாக எதிர்த்த ஒரு கட்சி ஜனசங்கம்தான் (இன்றைய பிஜேபி).
மொழியின் அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நிலையில், பழைய ஜன சங்கக் கொள்கைப்படி ஒரே நாடு, ஒரே மொழி என்று இன்றும் கூப்பாடுபோடுவதைக் கவனிக்கத் தவறக் கூடாது.
No comments:
Post a Comment