பக்தி வந்தால் புத்தி போகும்! தமிழ்நாட்டிலும் எச்சில் இலையில் உருளும் அவலம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 18, 2022

பக்தி வந்தால் புத்தி போகும்! தமிழ்நாட்டிலும் எச்சில் இலையில் உருளும் அவலம்

மதுரை, நவ.18 மகாதேவ அஷ்டமியன்று சாப்பிட்ட இலையில் உருண்டு நேர்த்திக்கடனாம்! மாதம்தோறும் வரும் அஷ்டமி நாளில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுமாம். அதேபோல ஆண்டுக்கு ஒரு முறை வரும் வைக்கத்து மகாதேவ அஷ்டமி நாளில் சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெறுமாம். அதன்படி திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவிலில் வைக்கத்து மகாதேவ அஷ்டமியையொட்டி சொக்கநாதருக்கு சிறப்பு பூஜையும், தீபாராதனையும் நடைபெற்றதாம். இதனையடுத்து விழாக் குழுவினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. அதில் சாப்பிட்ட இலையில் பக்தர்கள் சிலர் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் உருண்டு நேர்த்திக்கடன் செலுத்தினராம்!


No comments:

Post a Comment