கொலைகார சாமியாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 27, 2022

கொலைகார சாமியாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

திருச்சி, நவ. 27- தொழில் அதிபரை காருடன் எரித்துக் கொன்ற சாமியாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. திருச்சி கிராப்பட்டியை சேர்ந்தவர் துரைராஜ். தொழிலதிபரான இவ ருடைய கார் டிரைவர் சக்திவேல். இவர்கள் இருவரும் கடந்த 2007-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22-ஆம் தேதி திருச்சி-திண்டுக்கல் சாலையில் திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே காருடன் எரித்துக் கொலை செய்யப்பட்ட னர். 

இந்த இரட்டை கொலை நிகழ்வு தமிழ்நாடு அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வு குறித்து வையம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். ஆனால் கொலையாளிகளை கண் டுபிடிக்க முடியவில்லை. இதனை தொடர்ந்து இந்த வழக்கு விசா ரணை சி.பி.சி.அய்.டி. காவல் துறைக்கு மாற்றப்பட்டது.

சி.பி.சி.அய்.டி.காவல்துறையின ரின் விசாரணையில், துரைராஜூம், திருச்சி சிறீரங்கத்தை சேர்ந்த வைர வியாபாரி தங்கவேலும் நண்பர்கள் என தெரியவந்தது. மேலும் தங்க வேல் தொழிலில் ஏற்பட்ட இழப்பு காரணமாக நாமக்கல்லை சேர்ந்த ஜோதிடர் ஒருவரிடம் சென்று பரிகாரம் செய்வது தொடர்பாக கேட்டுள்ளார். அந்த ஜோதிடர் மூலமாக தங்கவேலுக்கு சாமியார் கண்ணன் என்பவர் அறிமுகமா னார். இதன்மூலம் தங்கவேல் வீட் டுக்கு அடிக்கடி சாமியார் கண் ணன் வந்து சென்றுள்ளார். இதில் தங்கவேலின் மனைவி யமுனாவுக் கும், சாமியார் கண்ணனுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. 

இதனை அறிந்த துரைராஜ் யமுனாவை கண்டித்ததால் ஆத்தி ரம் அடைந்த சாமியார் கண்ணன், யமுனாவுடன் சேர்ந்து திட்ட மிட்டு துரைராஜையும், அவரது கார் டிரைவர் சக்திவேலையும் எரித்து கொன்றது தெரியவந்தது. 

இதுதொடர்பாக சாமியார் கண்ணன், யமுனா, யமுனாவின் தாயார் சீதாலெட்சுமி ஆகியோரை சி.பி.சி.அய்.டி. காவல்துறையினர் கைது செய்தனர். இந்த கொலை வழக்கு திருச்சி 2ஆ-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடை பெற்று வந்தது. வயது முதிர்வு கார ணமாக திருச்சி மகளிர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த யமுனா வின் தாய் சீதாலெட்சுமி மரணம் அடைந்தார். மற்ற 2 பேர் மீதும் தொடர்ந்து விசாரணை நடை பெற்று வந்தது. 

இந்த வழக்கில் நீதிபதி கே.ஜெயக்குமார் 25.11.2022 அன்று தீர்ப்பு கூறினார். அதில், குற்றம் சாட்டப்பட்ட சாமியார் கண் ணன், யமுனா ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment