அவகாசம்
மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க 2 நாள்கள் கூடுதலாக அவகாசம் அளிப்பதாக மின்சார வாரியம் அறிவிப்பு.
வாக்காளர்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்கவும், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்யவும் இன்றும், நாளையும் (26, 27-11-2022) சிறப்பு முகாம் தமிழ்நாடு முழுவதும் அனைத்து வாக்குச்சாவடி மய்யங்களிலும் நடைபெறும் என தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்.
தொடக்கம்
சென்னை அய்.அய்.டி.யில் 2023ஆம் ஆண்டுக் கான பி.எஸ்.டேட்டா சயின்ஸ், அப்ளிகேஷன்ஸ் பட்டப் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியது.
கூடாதாம்!
ரிசர்வ் வங்கி சட்டத்தின் கீழ் எந்த நோட்டையும் பண மதிப்பிழப்பு செய்வதற்கான அதிகாரம் அரசுக்கு உள்ளது என்றும், இதில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என்றும் உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரி வித்துள்ளதாம்!
பணிகள்
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலை வர் நியமனம் தொடர்பான பணிகள் தொடங்கியுள்ளது என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்.
நடைமுறை
சென்னை மாநகர பேருந்தில் பயணிக்கும் பயணி களுக்கு அடுத்தடுத்த நிறுத்தங்களின் பெயரை ஒலி பெருக்கி மூலம் அறிவிக்கும் திட்டம் இன்று (26-11-2022) முதல் நடைமுறைக்கு வருகிறது.
ஒழிப்பு
ஒன்றிய அரசு துறைகளில் 15 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்படும் வாகனங்களை அழிப்பதற்கான உத்தரவில் ஒன்றிய அமைச்சர் நிதின்கட்கரி கையெழுத் திட்டுள்ளார்.
சட்டம்
அச்சு, மின்னணு மற்றும் டிஜிட்டல் மீடியாக்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும் மற்றும் கட்டுப் படுத்தும் வகையில், விரைவில் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது என ஒன்றிய அரசின் செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர் தகவல்.
கலந்தாய்வு
கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் இளம் அறிவியல் மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு டிசம்பர் 5ஆம் தேதி தொடங்குகிறது.
No comments:
Post a Comment