புதுடில்லி, நவ. 18 ஒன்றிய அரசை கண் டித்து, நாடு முழுவதும் ஆளுநர் மாளிகைகளை நோக்கி 26-ஆம் தேதி பேரணி நடத்தப்படும் என்று விவசாய கூட்ட மைப்பு அறிவித்துள்ளது.
சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் தலைவர் தர்ஷன் பால் நேற்று (17.11.2022) டில்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
கடந்த ஆண்டு நவம்பர் 19-ஆம் தேதி, வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெற்றது. அதனால், வருகிற 19-ஆம் தேதி வெற்றி தினமாக கொண் டாடப்படும். ஒன்றிய அரசு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு எழுத்து பூர்வமாக உறுதி அளித்தது. ஆனால் அவற்றில் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை. விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான குழுவை அமைக்கவில்லை. விவ சாயிகள் மீது போடப் பட்ட பொய் வழக்கு களை திரும்பப் பெற வில்லை. குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டரீதியான உத்தரவாதம் வழங்க வேண்டும் என்ற முக்கிய கோரிக்கையை பரிசீலிக்கக்கூட தயாராக இல்லை.
இந்தநிலையில், வாக்குறுதியை மீறிய ஒன்றிய அரசை கண் டித்து, நாடு முழுவதும் 26-ஆம் தேதி ஆளுநர் மாளிகைகளை நோக்கி பேரணி நடத்தப்படும். மேலும், டிசம்பர் 1 முதல் 11-ஆம் தேதிவரை அனைத்து அரசியல் கட்சிகளின் மக்களவை, மாநிலங்களவை அலுவ லகங்களை நோக்கி பேரணி நடத்தப்படும். அடுத்த கட்ட நடவ டிக்கை குறித்து டிசம்பர் 8-ஆம் தேதி கூட்டம் நடத்தி முடிவு செய்யப் படும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment