அய்தராபாத், நவ.2- தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டம், முனுகோடு சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் நாளை (3ஆம் தேதி) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதனையொட்டி, இத்தொகுதியில் ஆளும் டிஆர்எஸ் கட்சி, பாஜக மற்றும் காங் கிரஸ் கட்சிகளுக்கிடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது. ஏற்கெனவே
டிஆர் எஸ் கட்சியை சேர்ந்த 4 சட்டமன்ற உறுப்பினர்க்களை பாஜ கட்சிக்கு இழுக்க தலா ரூ.100 கோடி வீதம் ரூ.400 கோடி பேரம் பேசப்பட்டதாக 3 பேர் கைதாகி உள்ளனர்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நேற்று (1.11.2022) பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஈடல ராஜேந்தர் தனது மனைவி மற்றும் ஆதரவாளர்களுடன் இத்தொகுதிக்கு சென்றார். அப்போது, டிஆர்எஸ் கட்சியி னருக்கும், பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, பாஜக சட்டமன்ற உறுப்பினர் சென்ற கார் மீது டிஆர்எஸ் கட்சியினர் கற்களை வீசி தாக்கு தல் நடத்தினர்.
பதிலுக்கு பாஜகவினரும் தாக்கினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் அடிதடி நடந்தது. பின்னர் காவல்துறை யினர் தலையிட்டு, தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
No comments:
Post a Comment