உள்ளிக்கோட்டை பெரியார் பெருந் தொண்டர் ஒன்றிய விவசாய அணி தலைவர் வயது 94 அய் எட்டிய குமாரசாமியை, அவரது இல்லத்தில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், மாவட்ட செயலாளர் கணேசன், மாவட்ட அமைப் பாளர் அன்பழகன், மண்டல பகுத்தறிவு ஆசிரியர் அணி அமைப்பாளர் ரமேஷ், ஒன்றிய செயலாளர் செல்வராசு ஆகியோர் 26.11.2022 அன்று நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தனர்.
94 வயதிலும் உணர்ச்சி குன்றாதவராக, கொள்கை ஆர்வம் மிக்கவராக தோழர் குமாரசாமி விளங்குகிறார். ஜாதி ஒழிப்பு போராட்டத்தில் திருச்சி மத்திய சிறையில் ஆறு மாத காலம் சிறையில் இருந்த செம்மல் ஆவார் அவர்.
No comments:
Post a Comment