மூத்த குடிமக்கள் சலுகை ரத்து எதிரொலி ரயில் பயணிகளின் எண்ணிக்கை சரிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 29, 2022

மூத்த குடிமக்கள் சலுகை ரத்து எதிரொலி ரயில் பயணிகளின் எண்ணிக்கை சரிவு

புதுடில்லி, நவ. 29- நாடு முழு வதும் கடந்த 2021--2022 ஆம் ஆண்டில் பயணம் செய்த ரயில் பயணிகளின் எண்ணிக்கை ஆய்வு செய் யப்பட்டது. இதில் மூத்த குடிமக்கள் பயணிகளின் எண்ணிக்கை 24 சதவீதம் அளவுக்கு சரிந்திருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. அதாவது 2021--2022ஆம் ஆண்டில் வெறும் 5.5 கோடி மூத்த குடிமக்களே ரயில்களில் பயணம் செய்துள்ளனர். 

அதேநேரம் இது 2019-2020ஆம் ஆண்டில் 7.2 கோடியாகவும், 2018--2019ஆம் ஆண்டில் 7.1 கோடியாகவும் இருந்துள் ளது. எனினும் கரோனா பாதிப்பு நிலவிய 2020-2021ஆம் ஆண்டில் சுமார் 1.9 கோடி மூத்த குடிமக்களே ரயில்களை நாடியுள்ளனர். 

கடந்த 2021--2022ஆம் ஆண்டில் பயணிகள் எண் ணிக்கை குறைந்ததற்கு கரோனா அச்சுறுத்தல் தான் காரணம் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அதேநேரம் மூத்த குடி மக்களுக்கான சலுகை களை ரயில்வே ரத்து செய் ததும் இந்த காலகட்டத் தில் என்பது குறிப்பிடத் தக்கது ஆகும்.

No comments:

Post a Comment