சென்னை.நவ.7- தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கத்தின் (டான்ஸ்டியா) தலைவர் கே.மாரியப் பன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாட்டில் கடந்த செப்.9ஆம் தேதி முதல் மின் கட்டணம் மிகப்பெரிய அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து, முதலமைச்சரை நேரில் சந்தித்து டான்ஸ்டியா சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
கடந்த செப்.4ஆம் தேதி வரை குறைந்த மின்னழுத்த மின்சாரத்தை பயன்படுத்துவோருக்கு ஒரு கிலோ வாட்டுக்கு மாலை நேரங்களில், அதா வது, 6 முதல் 9 மணி வரை ரூ.35 மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது 50 கிலோ வாட்டுக்கு கீழ் வரை பயன்படுத்துவோருக்கு ரூ.75, 50 முதல்112 கிலோவாட் வரை பயன்படுத் துவோருக்கு ரூ.150, 112 கிலோவாட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு ரூ.550 என உயர்த்தப்பட்டுள்ளது. இதுதவிர, காலை 6 முதல் 10 மணி வரை மற்றும் மாலை 6 முதல் 10 மணி வரை மின்சாரம் உபயோகிப்பவர்களுக்கு ஒரு யூனிட் டுக்கு தற்போது உயர்த்தப்பட்டுள்ள ரூ.7.50-க்கு மேல் கூடுதலாக 25 சதவீதம் மின் கட்டணம்வசூலிக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
செப்.5ஆம் தேதி முதல் குறைந்தழுத்த (எல்டி) மின்சாரம் உபயோகிப்பவர் களுக்கு ‘பீக்அவர்’ நேரங்களில் ஒரு யூனிட்விலை ரூ.9.38 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், உயரழுத்த மின்சாரம் (எச்டி) உப யோகிப்பவர்களுக்கு ஒரு யூனிட் விலை ரூ.6.75என நிர்ணயம் செய்திருப்பதால், பீக் ஹவர் நேரங்களில் இந்தஎச்டி மின்சாரம் உபயோகிப்பவர்களுக்கு மின்கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ரூ.8.43 ஆகும். அதாவது,எச்டி மின்சாரம் உபயோகிப்பவர்களைவிட எல்டி மின்சாரம் உபயோகிப்பவர்கள் 94 பைசா கூடுதலாகசெலுத்த வேண்டும். எனவே, எல்டி மின்சாரம் உபயோ கிக்கும் நிறுவனங்களுக்கும் ஒரு யூனிட்டுக்கு ரூ.7.50 ஆக இருப்பதை ரூ.6.75 ஆக குறைக்க வேண்டும். சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ஒரு யூனிட் மின் கட்டணம் ஆந்திராவில் ரூ.7.21, கேரளாவில் ரூ.6.30,தெலங்கானா வில் ரூ.7.21, கருநாடகாவில் ரூ.8 என வசூலிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இது ரூ.9.38 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, இதை ரூ.6.75 ஆக குறைக்க வேண்டும். -இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment