விருத்தாசலம் மாவட்டக் கழகக் கலந்துரையாடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 7, 2022

விருத்தாசலம் மாவட்டக் கழகக் கலந்துரையாடல்

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90 ஆவது பிறந்த நாள்: 90 கூட்டங்கள் - 500 ‘விடுதலை' சந்தாக்கள் வழங்க முடிவு

விருத்தாசலம், நவ.7- விருத்தாசலம் கழக மாவட்ட கலந்துரை யாடல் கூட்டம் கடந்த அக்டோபர் 25ஆம் தேதி நடைபெற்றது இதில், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடான ‘விடுதலை'க்கு இரண்டாம் தவணையாக 500 ‘விடுதலை' சந்தாக்கள் வழங்குவது, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன் னிட்டு 90 கூட்டங்களை நடத்துவதென முடிவெடுக்கப்பட்டது.

 விருத்தாசலம் எம்.எஸ்.ஜி. வளாகத்தில் நடைபெற்ற கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில், கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் கலந்து கொண்டு  உரையாற்றினார். 

அப்போது, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு டிசம்பர் 2 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் விழாவிலும், அதனைத் தொடர்ந்து உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடான ‘விடுதலை'க்கு இரண்டாம் கட்டமாக 30,000 சந்தாக்கள் வழங்கும் நிகழ்வு திருப்பத்தூரில் நடைபெற இருக்கிறது. இரண்டு நிகழ்வுகளிலும் விருத்தாசலம் கழக மாவட்டம் சார்பில் தனி ஊர்தியில் பங்கேற்கவேண்டும் எனவும், இரண்டாம் கட்டமாக விருத்தாசலம் கழக மாவட்டம் சார்பில் 500 ‘விடுதலை' சந்தாக்கள் வழங்கவேண்டும் என பேசினார்.

கூட்டத்தில் மாவட்டத் தலைவர் அ.இளங்கோவன், மாவட்டச் செயலாளர் ப.வெற்றிச்செல்வன், மாநில இளை ஞரணிச் செயலாளர் த.சீ.இளந்திரையன், மாவட்ட அமைப் பாளர் வை.இளவரசன் ஆகியோர் முன்னிலை வகித்துப் பேசினர்.

விருத்தாசலம் ஒன்றிய தலைவர் கி.பாலமுருகன், ஒன்றிய செயலாளர் கா.குமரேசன், வேப்பூர் வட்டார தலைவர் பி.பழனிச்சாமி, கம்மாபுரம் ஒன்றியத் தலைவர் நா.பாவேந்தர் விரும்பி, பெண்ணாடம் நகர செயலாளர் செ.கா ராஜேந்திரன், விருத்தாசலம் நகர செயலாளர் த.சேகர், மாவட்ட இளை ஞரணி தலைவர் செ.சிலம்பரசன், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் செ.ராமராஜ், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர்  மு. முகமது பஷீர், கழுதூர் ம.இளங்கோவன் இ.இளங்கனி,  கீரனூர் கங்கை அமரன், கா.அறிவழகன், பெண்ணாடம் நகர அமைப்பாளர் ந.சுப்பிரமணியன், விருத் தாசலம் நகர இளைஞரணி தலைவர் ஆகாஷ், சவரிமுத்து  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்  

விருத்தாச்சலம் கழக மாவட்டம் மங்களூர் ஒன்றிய அமைப்பாளர் பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி தொண்டங்குறிச்சி  மு.நடராஜன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும், வீர வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

 500 ‘விடுதலை' சந்தா : தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு  30 ஆயிரம் ‘விடுதலை' சந்தாக்கள் வழங்க தீர்மானிக்கப்பட் டுள்ளது. இதனடிப்படையில் விருத்தாசலம் கழக மாவட்டம் சார்பில் 500 ‘விடுதலை' சந்தாக்கள் வழங்குவதென தீர்மானிக்கப்படுகிறது.

 90 தெருமுனை கூட்டங்கள்

 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு விருத்தாசலம் கழக மாவட்டம் சார்பில் மாவட்டம் முழுவதும் 90 கூட்டங்களை நடத்துவது எனவும், குருதிக்கொடை முகாம், மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட தொண்டறப் பணிகளில் ஈடுபடுவது என முடிவு எடுக்கப்பட்டது.

தமிழர் தலைவர் பிறந்தநாள் விழா

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சென்னையில் டிசம்பர் 2 ஆம் தேதி நடைபெறும் விழாவிலும்,  அதனைத் தொடர்ந்து டிசம்பர் 17ஆம் தேதி திருப்பத்தூரில் நடைபெறும் ‘விடுதலை' சந்தா வழங்கும் விழாவிலும் விருத்தாசலம் கழக மாவட்டம் சார்பில் தனி ஊர்தியில் பங்கேற்பது என முடிவெடுக்கப்பட்டது.

கூட்டத்தின் முடிவில் பெண்ணாடம் நகர அமைப்பாளர்  ந.சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment