கரூர்,நவ.1- கரூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் கரூர் காந்திகிராமம் இளைஞரணி மாவட்ட துணைச் செயலாளர் ராஜா இல்லத்தில் நடைபெற்றது.
கரூர் மாவட்ட கழக தலைவர் ஆசிரியர் குமாரசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கடந்த அக்டோபர் எட்டாம் தேதி தலைமைச் செயற்குழு தீர்மானங் களை செயலாக்குதல்,
டிசம்பர் இரண்டு தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்தநாள் விழா விடுதலை சந்தா சேர்த்தல் உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றுவதற்காக, கரூர் மாவட்ட திராவிடர் கழக சிறப்புகூட்டத்தில் மாநில தொழிலாளர் அணி செயலாளர் திரு வெறும்பூர் மு.சேகர், மாநில அமைப்புச் செயலாளர் மதுரை வே.செல்வம் ஆகி யோர் கலந்து கொண்டு தலைமைச் செயற் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர் மானங்களை விளக்கி எடுத்துரைத்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர் மானங்கள் வருமாறு:
1) கடந்த 8.10.2022 தேதி சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற தலைமைச் செயற்குழு எடுத்த முடிவின்படி மாவட் டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதியில் பத்து நபர்களை சந்தித்து ஒவ்வொரு நபரிடமும்10சந்தாக்கள், அல்லது ஆயுள் சந்தாக்களையோ, வாங்கி தலைமைக் கழ கத்தில் ஒப்படைக்க உறுதி அளிக்கிறோம்.
2) டிசம்பர் இரண்டாம் தேதி, தமிழர் தலைவர் அவர்களின் பிறந்தநாளை பெரியார் கொள்கை பரப்பும் நிகழ்வாக நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது.
3) தலைமை கழக அறிவுறுத்தலின்படி பிரச்சார திட்டங்களைநடைமுறைப்படுத்த முடிவு செய்யப்படுகிறது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிகழ்ச்சியில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், சே.அன்பு, ஜெகநாதன், மாவட்ட செயலாளர் காளிமுத்து ,மாவட்ட துணைச் செயலாளர் ராஜு, கரூர் நகர தலைவர் க.நா.சதாசிவம், நகரச் செயலாளர் ம.சதாசிவம், மாவட்ட மகளிர் பாசறை தலைவர் அம்பிகா, மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் ராஜா, கிருஷ்ண ராயபுரம் ஒன்றிய செயலாளர் பெருமாள், காலனி கிருஷ்ணன், சின்னமுத்து, மா.ராம சாமி, உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நன்றி உரையை கரூர் நகர தலைவர் க.நா.சதாசிவம் நிகழ்த்தினார்.
No comments:
Post a Comment