இன்றைய நவீன யுகத்தில் துரித உணவு வகைகளின் சுவையூட்டிகள் மற்றும் அதன் வண்ணம் காரணமாக நம்மை அளவிற்கு அதிக மான சாப்பிடத்தூண்டுகிறது, நமது உடலில் வயிறு நிறைவதற்கும் பசி நீங்குவதற்கும் வேறுபாடுகள் உண்டு. திருவள்ளுவர் கூட உணவு குறித்து 10 குறள்களில் அழகாக எடுத்து ரைத்துள்ளார்.
அதாவது 2000 ஆண்டுகளுக்கு முன்பே நாம் உண்ணும் உணவு குறித்து பெரிதும் அக் கறை கொண்டிருந்தோம் என்பதற்கு இதுவே பெரும் எடுத்துக்காட்டு ஆகும்
வயிறு நிறைந்துவிட்டதாக மூளைக்கு தகவல் செல்வதற்கு சில நிமிடங்கள் ஆகும். எனவே அவசர அவசரமாக கிடைப்பதை விழுங்காமல், மெதுவாக உணவை ருசித்து சாப்பிடுங்கள். இதனால் வயிறு நிறைந்த உணர்வு உண்டாகி அளவுக்கு மீறி சாப்பிடும் பழக்கம் மாறும். ஆரோக்கியமாக வாழ்வதற்கு உணவு தேவை. ஆனால், அதை அளவாகச் சாப்பிடுவது அவசி யம். அதிகப்படியான உணவு உடல் நலத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம்.
ஒவ்வொருவருக்கும் இடையே உடலின் செயல்பாடு வித்தியாசப்படுவதால், பொதுவாக ஒரு அளவை குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. உங்கள் உடல்காட்டும் அறிகுறிகளை வைத்து, நீங்கள் தேவைக்கு அதிகமாக சாப்பிடுகிறீர்களா என்பதை கண்டறியலாம். தேவைக்கு அதிகம் என்பதன் பொருள், உங்கள் உடலின் செயல்பாடு கள் சீராக இருப்பதற்கு போதுமான உணவின் அளவை மீறுவது என்பதாகும். நீங்கள் சாப்பிடும் உணவின் அளவு அதிகமாகும்போது, உங்கள் உடலே போதும் என்பதற்கான அறிகுறிகளைக் காட்டும். வயிறு நிறைந்தது போல் தோன்றும், வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படும். உணவு போதும் என்று ஒதுக்கும் அளவைத் தாண்டி, அதிகமாகச் சாப்பிடும்போது உடல்நலம் பாதிக்கும். சிலரால் அந்த அளவை கண்டுபிடிக்க முடியாததால் அதிகமாகச் சாப்பிடுவார்கள். சிலர் ஆசையால் அதிகம் சாப்பிடுவார்கள். எந்தக் காரணமாக இருந்தாலும், அளவுக்கு மிஞ்சினால் அனைத்தும் நஞ்சுதான். எனவே அதிகமாக உணவு உட்கொள்ளும் பழக்கத்தை எப்படித் தவிர்ப்பது என்று பார்க்கலாம்.
நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை கொஞ்சமாக சாப்பிட்டாலே வயிறு நிறைந்தது போன்ற உணர்வு தோன்றும். இதனாலும் சாப்பிடும் அளவு குறையும். உடல் உணர்த்தும் குறிப்புகளை உற்றுக் கவனித்து அதனை புரிந்து கொண்டு சாப்பிடப் பழகுவது நல்லது. கட்டாயத்திற்காக சாப்பிடாமல் பசி எடுத்தால் மட்டுமே சாப்பிட வேண்டும்.
வயிறு நிறைந்துவிட்டதாக மூளைக்கு சமிக் ஞைகள் செல்வதற்கு சில நிமிடங்கள் ஆகும். எனவே அவசர அவசரமாக கிடைப்பதை விழுங்காமல், மெதுவாக உணவை ருசித்து சாப்பிடுங்கள். இதனால் வயிறு நிறைந்த உணர்வு உண்டாகி அளவுக்கு மீறி சாப்பிடும் பழக்கம் மாறும். பிடித்தமான உணவாக இருந்தால் அதிகம் சாப்பிட விரும்பலாம். எனவே எந்த உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிடுகிறீர்கள் என்பதை கவனித்து அந்த நேரங்களில் விழிப் புணர்வாக இருப்பது நல்லது.
சாப்பிடும் உணவில் எண்ணெய் மற்றும் கொழுப்புபோன்றவை அதிகம் சேர்க்காமல், இனிப்பு. கார்ப்பு, உவர்ப்பு போன்ற சுவைகளை குறைத்து துவர்ப்பு - கசப்பு போன்ற சுவையுள்ள உணவுகளை அடிக்கடி உணவில் இடம் பெறுமாறு பார்த்துக்கொண்டால் வயிற்றுக்கும் நலம், அதனால் உடலும் நலத்தோடு நோயின்றி இருக்கும்.
No comments:
Post a Comment