உச்சநீதிமன்றம் கருத்து
புதுடில்லி, நவ. 17 பொதுப் பதவியில் இருப்பவர்கள் பிறரை புண்படுத்தும் வகை யில் மரியாதையில்லாமல் பேசக்கூடாது என்பது அரசமைப்பு சாசனத்தின் எழுதப் படாத விதி. அமைச்சர்கள், பொதுப் பதவி யில் இருப்பவர்கள் பிறரை இழிவுபடுத்தும் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிப்பதை தடுக்கும் வகையில் கூடுதல் வழி காட்டுதல் களை உருவாக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அந்த மனுக்களை நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான அரசியல்சாசன அமர்வு விசாரித்தது. 15.11.2022 அன்றைய விசா ரணையின்போது, பொதுப் பதவியில் இருப் பவர்கள் பிறரை புண்படுத்தும் வகையில் மரியாதையில்லாமல் பேசக்கூடாது என்பது அரசமைப்பு சாசனத்தின் எழுதப்படாத விதி.
மேலும் அரசமைப்பு சாசனத்தின் பண்பாட்டின் ஒரு பகுதியும்கூட. பொதுப் பதவியில் இருப்பவர்கள் கட்டுப்பாடுடன் நடக்க வேண்டும். இந்த நற்பண்பை சமூக, அரசியல்தளத்தில் வளர்க்க வேண்டும் என கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம், இந்த மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.
No comments:
Post a Comment