காரைக்குடி, நவ.29- மாவட்டத் தலைவர் ச. அரங்கசாமி தலைமையில், சிவகங்கை மண்டல தலைவர் கே.எம் சிகாமணி, சிவகங்கை மண்டல செயலாளர் அ.மகேந்திராசன், மாவட்டத் துணைத் தலைவர் கொ.மணிவண் ணன், மாவட்ட துணைச் செயலாளர் ந.ஜெக தீசன் ஆகியோர் முன்னிலையில், காரைக்குடி யில் வீர வணக்க நாள் கூட்டம் நடை பெற்றது. அனைவரையும் வரவேற்று உரையாற்றினார் மாவட்ட செயலாளர் ம.கு.வைகறை.
சிறப்புரையாற்றிய பேராசிரியர் மு.சு. கண் மணி" வடமாநிலங்களை விட தமிழ்நாடு வசதியான, வாழ்க்கைத் தரம்கொண்டதாகவும், அனைத்து தரப்பு மக்களும் கல்வி வேலை வாய்ப்பில் உயர்ந்த நிலையை அடைந் திருப்ப தற்கு அடித்தளமாக இருப்பது ஜாதி ஒழிப்பு போராளிகளின் தன்னலமற்ற தியாக வாழ்வே என்பதை எடுத்துரைத்தார். தொடர்ந்து சிறப் புரையாற்றிய மாநில மகளிரணி அமைப்பாளர் குடியாத்தம் ந.தென்மொழி "ஜாதியை பாதுகாக் கும் சட்டபிரிவின் நகலை எரித்து சிறை சென்ற, சிறையில் மாண்ட கருஞ்சட்டை மாவீரர் களின் துணிச்சலையும், மன உறுதியையும் அதை தந்தை பெரியாரிடமிருந்தே பெற்றார்கள் என் பதை விளக்கிப் பேசினார். காரைக்குடி நகர செய லாளர் தி.க. கலைமணி நன்றி உரை ஆற்றினார்.
நிகழ்வில் மாவட்ட ப.க தலைவர் சு.முழுமதி, கல்லல் ஒன்றிய தலைவர் பலவான்குடி
ஆ. சுப்பையா சாக்கோட்டை ஒன்றிய தலைவர் சி செல்வமணி, கல்லல் ஒன்றிய செயலாளர் கொராட்டி பாலு, மாவட்ட மகளிரணி அமைப் பாளர் பழ. அமுதவல்லி, மாவட்ட எழுத்தாளர் அமைப்பாளர் குமரன்தாஸ், தேவ
கோட்டை நகர தலைவர் மு.ருகப்பன்,
ஆ. பாலகிருஷ்ணன் டிஎன்எஸ்டிசி சேகர், தேவ கோட்டை ஒன்றிய செயலாளர் ஜோசப், திமுக பொதுக்குழு உறுப்பினர் கல்லல் கரு. அசோகன், காரைக்குடி திமுக இலக்கிய அணி தலைவர் ராம சீனிவாசன், தியாகராசன், சி.பி.எம். தெட்சிணா மூர்த்தி சி பி.எம். பெரியார் முத்து, தேவகோட்டை பகுத்தறிவாளர் கழக தோழர் சிவ தில்லை ராஜா, பாரதிதாசன், செந்தில்குமார் ஆகியோர் பங் கேற்றனர்.
No comments:
Post a Comment