சென்னை, நவ.27- தி.மு. கழக மூத்த முன் னோடி நாடாளுமன்ற மாநிலங்களவை மேனாள் உறுப்பினர் - வழக்குரைஞர் அ.அ.ஜின்னா அண்மையில் மறைவுற்றார். அதனையடுத்து “அ.அ.ஜின்னா அவர்களின் வாழ்க்கைப் பாதை" எனும் நூலின் வெளியீட்டு விழா, நேற்று (26.11.2022- சனிக்கிழமை) காலை 11.00 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயம் திமுக அலுவ லகத்தில் எளிய முறையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் - "அ.அ.ஜின்னா அவர்களின் வாழ்க்கைப் பாதை" எனும் நூலை திமுக தலை வரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அந்நூலின் முதற்படியை, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பெற்றுக் கொண்டார்.
திமுக பொதுச் செயலாளர் அமைச்சர் துரை முருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு (மக்களவை உறுப்பினர்) திமுக முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு. திமுக அமைப்புச் செய லாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக செய்தி தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், தலைமை நிலையச் செயலாளர் பூச்சி முருகன். 'சட்டக்கதிர்' இதழின் ஆசிரியர் வி.ஆர்.எஸ்.சம்பத், நூலின் ஆசிரியர் ராணி மைந்தன் மற்றும் இதயத்துல்லா ஜின்னா உள்ளிட்ட குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment