இரண்டாம் கட்ட ‘விடுதலை' சந்தா சேர்க்கையை விரைந்து முடிப்பது; தமிழர் தலைவரின் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாட முடிவுசேலம்,
நவ.10 சேலம் மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் குயில் பண்ணை வளாகத் தில் 6.11.2022 அன்று மாலை 6 மணி முதல் எட்டு மணிவரை கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் இளவழகன், மாவட்ட செயலாளர் வைரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
சுஜாதா தமிழ்ச்செல்வன், தமிழர் தலைவர், போலீஸ் ராஜூ, வீரமணி ராஜூ, தாதகாப்பட்டி பூபதி, வழக் குரைஞர் செல்வ குமார், நெய்வேலி பாவேந்தர் விரும்பி ஆகியோர் கருத்துரை ஆற்றினர்.
சேலம் மாவட்ட கழக அமைப் பாளராக தாதகாப்பட்டி பூபதி நிய மனம் செய்யப்பட்டார்.
தலைமைக் கழக கட்டளைப்படி உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடான ‘விடுதலை'க்கு அதிகபட்சமாக சந்தா சேர்த்து வழங்குதல் எனவும், தமிழர் தலைவர் ஆசிரியரின் 90 ஆவது பிறந்தநாளை சிறப்புற கொண்டாடு வது என்றும், பெரியார் 1000 பரி சளிப்பு நிகழ்ச்சியை சிறப்புற நடத் துவது என்றும் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
No comments:
Post a Comment