திருப்பூர், நவ. 30- திருப்பூர் மாநகரில் உள்ள ஒவ்வொரு வார்டுகளிலும் நவீன கருவிகளுடன் உடற்பயிற்சி நிலையம் அமைக்க வேண்டும் என்று அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் வலியுறுத்தியுள்ளது.
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் திருப்பூர் மாநகராட்சி 3ஆவது மண்டல மாநாடு ஏஅய்டியூசி சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு இளை ஞர் பெருமன்றத்தின் மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.ராஜேந்திரன் தலைமை வகித்தார். இதில், நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் விவரம்:
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் நவீன வசதிகளுடன் உள்விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும். மாநக ராட்சிக்கு உள்பட்ட 60 வாடுகளிலும் நவீன கருவிகளுடன் கூடிய உடற்பயிற்சி நிலையம் அமைக்க வேண்டும். அதே போல, வார்டில் ஓர் இடத்திலாவது நூலகம் அமைக்க வேண்டும். மாநகரில் சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மாநகரப் பகுதிகளில் காலை, மாலை வேளைகளில் கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும். மாநகரில் சேதமடைந்துள்ள சாலைகளை சீர மைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment