நகராட்சி, மாநகராட்சி நிர்வாகங்களுக்கு கூடுதல் அதிகாரம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 7, 2022

நகராட்சி, மாநகராட்சி நிர்வாகங்களுக்கு கூடுதல் அதிகாரம்!

சென்னை,நவ 7 நகராட்சிகளில் இதுவரை ரூ.5 கோடி வரையிலான பணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 10 கோடி ரூபாய் வரையிலான பணிகளுக்கு இயக்குநரே அனுமதி வழங்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

 நகராட்சி மற்றும் மாநகராட்சி நிர்வாகங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ”சென்னை மாநகராட் சியை தவிர்த்து நகராட்சி, மாநகராட் சியில் மேற்கொள்ளப்படும் பொது செலவினங்கள், ஒன்றிய, மாநில அரசுகளால் ஒதுக்கப்படும் நிதிகளை பயன்படுத்துவதற்கான அதிகாரங்கள் உயர்த்தப்பட்டிருக்கிறது.

 அதன்படி 35 லட்ச ரூபாய் வரையிலான பணிகளுக்கு நகராட்சி நிர்வா கம் அனுமதி வழங்கி வந்த நிலையில், தற்போது ஒரு கோடி ரூபாய் வரையிலான பணிகளுக்கு அனுமதி வழங்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

நகராட்சிகளில் இதுவரை ரூ. 5 கோடி வரையிலான பணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 10 கோடி ரூபாய் வரையிலான பணிகளுக்கு இயக்குநரே அனுமதி வழங்கலாம் என்று தெரிவிக் கப்பட்டுள்ளது. அத்துடன், 10 கோடி ரூபாய்க்கு அதிகமான மதிப்புள்ள திட்டங்களை செயல்படுத்தும் போது அரசின் அனுமதி பெற வேண்டும் . 

அதே போல ரூ. 10 லட்சம் வரையிலான திட்டங்களை செயல்படுத்த மாநகராட்சி ஆணையருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஒரு கோடி ரூபாய் வரை உயர்த்தப் பட்டுள்ளது.

இதேபோல் , இதுவரை மாநகராட்சி மேயர்களுக்கு 20 லட்சம் ரூபாய் வரையிலான பணிகளுக்கு அனுமதி வழங்க அதிகாரம் இருந்த நிலையில், இனி 50 லட்சம் ரூபாய் வரையிலான பணி களுக்கு அனுமதி வழங்கலாம். 

மாநகராட்சிகளில் 10 கோடி ரூபாய் வரையிலான பணிகளுக்கு இயக்குநரே அனுமதி வழங்கலாம். அதற்கு அதிக மான தொகை கொண்ட திட்டங்களுக்கு அரசின் அனுமதி பெற வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment