தேசிய தடகளப் போட்டியில் ‘டரிபிள் ஜம்ப்’ பிரிவில் தமிழ் நாட்டைச் சேர்ந்த மாணவி சாதனா ரவி தேசிய சாதனை படைத்து உள்ளார்.
சிஅய்எஸ்சிஇ பள்ளிகளுக்கு இடையிலான தடகளப் போட்டிகள் மகாராட்டிரா மாநிலம் புனே-வில் நடைபெற்று வருகிறது. 17 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கான ட்ரிபிள் ஜம்ப் போட்டியில் சென்னை அடையார் செயின்ட் மைக்கேல் பள்ளியைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி சாதனா முதலிடம் பிடித் தார்.
11.45 மீட்டர் தாண்டி முதலிடம் பிடித்த இவர் முந்தைய தேசிய சாதனையை முறியடித்தார்.
தேசிய அளவில் சாதனை புரிந் துள்ள இவர் தடை தாண்டும் ஓட் டத்தில் மேனாள் தேசிய வாகைய ரான எம். வி. ராஜசேகரிடம் பயிற்சி பெற்றுவருகிறார். இதற்கு முன் 10.99 மீட்டர் தூரம் தாண்டியதே தேசிய சாதனையாக இருந்த நிலையில் தற்போது சாதனா 11.45 மீட்டர் தாண்டி சாதனை புரிந்துள்ளார். தேசிய அளவில் சாதனை படைத்து முதலிடம் பிடித்துள்ள தமிழ்நாட்டு வீராங்கனை சாதனாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
No comments:
Post a Comment