சென்னை,நவ.2- அரசின் பயன்பாட்டுக்காக ஏற்கெ னவே கையகப்படுத்திய நிலங்களுக்கு புதிய நிலம் கையகப் படுத்தும் சட்டம் அமலுக்கு வந்த கடந்த 2014 ஜனவரியில் இருந்த சந்தை மதிப்பின் அடிப்படையில் இழப்பீடு நிர்ண யம் செய்ய வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் சிறீபெரும்புதூர் அருகில் தொழில் பூங்கா அமைக்க கடந்த 2010ஆம் ஆண்டு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இதுவரை இழப்பீடு வழங்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த 2013ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தல் நியாயமான இழப்பீடு மற்றும் வெளிப்படைத்தன்மை சட்டத்தை ஒன்றிய அரசு நிறைவேற்றியது. இந்த சட்டம் அமலுக்கு வந்த கடந்த 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இருந்த சம்பந்தப்பட்ட நிலங்களின் சந்தை மதிப்பின் அடிப்படையில் சிறீபெரும் புதூர் பகுதியில்கையகப்படுத்திய தொழில்பூங்கா நிலங் களுக்கு இழப்பீடு நிர்ணயம் செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி டி.சவுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு, அரசின் பயன்பாட்டுக்காக கையகப் படுத்தப்படும் நிலங்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்கும் வகையில்தான் ஒன்றிய அரசு புதிய சட்டத்தை நிறைவேற் றியுள்ளது. எனவே அந்த சட்டம் அமலுக்கு வந்த நாளில் இருந்த நிலத்தின் சந்தை மதிப்பின் அடிப்படையில் இழப்பீட்டை நிர்ணயிக்க வேண்டும்.
அரசு இதுதொடர்பான சட்ட விதிகளை அமல்படுத் தினால் மட்டும் போதாது. கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு நியாயமான இழப்பீடு வழங்குவதையும் அரசு உறுதி செய்ய வேண்டும். எனவே சிறீபெரும்புதூரில் தொழில் பூங்கா அமைக்க கடந்த 2010ஆம் ஆண்டு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு, புதிதாக நிலம் கையகப்படுத்தல் சட்டம் அமலுக்கு வந்த 2014ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்த நிலத்தின் சந்தை மதிப்பின் அடிப்படையில் இழப்பீட்டுத் தொகையை மீண்டும்நிர்ணயம் செய்து இழப்பீட்டுதாரர் களுக்கு வழங்க வேண்டும், என அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment