பாளையங்கோட்டை, நவ.15 பாளையங் கோட்டை பேருந்து நிலைய வளாகத்தில் அரசு பொதுத் தேர்வுக்கு படிக்கும் மாணவ-மாணவிகளுக்காக புதிதாக படிப்பகம் அமைக்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு திறந்து வைத்தார்.
நெல்லை மாநகராட்சி சார்பில் தமிழ் நாட்டிலேயே முதல் முறையாக பாளை யங்கோட்டை பேருந்து நிலைய வளாகத்தில் அரசு பொதுத்தேர்வுக்கு படிக்கும் மாணவ- மாணவிகளுக்கான படிப்பகம் அமைக்கப் பட்டது. இதன் திறப்பு விழாவிற்கு சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப். தலைமை தாங்கினார். மேயர் சரவணன், மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, துணை மேயர் ராஜூ ஆகியோர் முன்னிலை வகித் தனர். மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, படிப் பகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
அரசு போட்டி தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களின் வசதிக்காக நெல்லை மாநக ராட்சி சார்பில் இந்த படிப்பகம் அமைக்கப் பட்டுள்ளது. இங்கு போட்டி தேர்வுக்கான பொது அறிவு மற்றும் நுழைவு தேர்வுக்கான புத்தகங்கள், நாளிதழ்கள், மாணவர்கள் பயன் பெறும் வகையில் இதர பாடப்புத்தகங்களும் வைக்கப்பட்டுள்ளது. இந்த மய்யத்தில் குளிர்சாதன வசதி, குடிநீர் வசதி, மாணவர்கள் அமர்ந்து படிக்கும் விதமாக இருக்கைகள், மேஜைகள், கண்காணிப்பு கேமரா, கழிப்பறை ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளது. லிப்ட் வசதி உள்ளதால் மாற்றுத் திறனாளி மாண வர்களும் பயன் பெறலாம்.
இந்த மய்யம் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும். 50 மாணவர்கள் அமர்ந்து படிக்கலாம். இந்த கல்வி மய்யத்தை நாள் ஒன்றுக்கு ரூ.12 மட்டும் செலுத்தி மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மாணவர்களும் பயன்பெறும் வகையில் இந்த படிப்பகம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்களை ஊக்குவிக்கின்ற வகையில் பல்வேறு கருத்தரங்களும் நடத்தப் படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment