தமிழர் தலைவர் கண்டனம்
கடந்த 28 ஆம் தேதி பன்னாட்டுக் கடல் எல்லை அருகில் இந்தியக் கடல்பரப்பில் மீன்பிடித்துக் கொண் டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் 24 பேரை இலங்கைக் கடற்படை அத்துமீறி கைது செய்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை நிகழ்த்தும் அட்டூழியங்கள் குறைந்தபாடில்லை.
இந்திய அரசு உடனடியாகத் தலையிட்டு நட வடிக்கை எடுத்து மீனவர்களை மீட்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்திய அரசின் பிரதமருக்கும், வெளியுறவுத் துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதி வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டு மீனவர்களின்மீதான தாக்குதல்களை ஒன்றிய அரசு தொடர்ந்து கண்டும் காணாமல் இருப்பது நியாயமற்றது. பா.ஜ.க. பதவியேற்ற பிறகு, சீனா அஞ்சுகிறது; பாகிஸ்தான் அஞ்சுகிறது என்று பேசுவதெல்லாம் போலிப் பெருமையே என்பதை இலங்கையின் அத்துமீறல்கள் தொடர்ந்து நிறுவிக் கொண்டிருக்கின்றன. வாய்ச் சவடால் விடுவதைத் தவிர்த்து, குடிமக்களைக் காக்கும் பணியில் உண்மையாக நடந்துகொள்ளட்டும் ஒன்றிய அரசு!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
No comments:
Post a Comment