29.10.2022 சனி காலை 10 மணிக்கு பஞ்சாப் மாநிலம் பர்னாலா மாவட்டம் பர்னாலா நகரில் தர்க்க்ஷீல் சவுக், தர்க்க்ஷீல் பவனில் FIRA- அகில இந்திய பகுத்தறிவாளர்கள் அமைப்பின் சார்பில் 12ஆவது தேசிய மாநாடு நடைபெற்றது.
இம்மாநாட்டில் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் புத்தக அரங்கு அமைக்கப்பட்டது. பகுத்தறிவு, சமூக நீதிக்கான பல நூல்கள் விறுவிறுப்பாக விற்பனையாகியது.
29ஆம் தேதி முதல் நாள் மாநாட்டில் மதிய அமர்வில் பகுத்தறிவாளர் கழக தலைவர் இரா.தமிழ்ச்செல்வனும் மதுரை எஸ்.என். அன்புமணியும் 51A(H) என்னும் தலைப் பிலான அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
தொடர்ந்து மாநாடு வெற்றி பெற வாழ்த்து செய்தியை அனுப்பியிருந்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி வீரமணி அவர்களது கடிதத்தை பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் வி.மோகன் அவையில் படித்து FIRA பொதுச் செயலாளர் சுபாஷ்கோடேராவ் அவர்களிடம் மோகனும் தமிழ்ச்செல்வனும் பலத்த கையொலிகளுக்கிடையே வழங்கினார்கள்.
மறுநாள் 30ஆம் தேதி முற்பகல் பகுத்தறிவாளர் கழக செயல்பாடுகள் பற்றி பொதுச்செயலாளர் வி.மோகன் உரையாற்றினார்.
பஞ்சாப் பிரிவினையின் வரலாற்றுக் காயங்கள் என்னும் இறுதி அமர்வில் பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற தலைவர் முனைவர் வா.நேரு அறிக்கையாளராக தமது உரையை நிகழ்த்தினார்.
பிற்பகல் நடைபெற்ற அகில இந்திய பகுத்தறிவாளர் அமைப்புகளின் கூட்டமைப்பு நிர்வாகக் குழு கூட்டத்தில், அகில இந்திய துணைத் தலைவர்களில் ஒருவராக இரா. தமிழ்ச்செல்வனும், அகில இந்திய செயலாளர் களில் ஒருவராக வி. மோகனும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டார்கள்.
No comments:
Post a Comment