அ.தி.மு.க.வின் துவக்க கால மூத்த உறுப்பினர்களில் ஒருவரும், மேனாள் சட்டப் பேரவை உறுப்பினரும், மேனாள் சட்டப் பேரவை கொறடாவாகவும், "பெரியார் சமூகநீதி அரசு விருது" பெற்றவருமான முதுபெரும் கொள்கை வீரர் மானமிகு துரை. கோவிந்தராசன் அவர்கள் உடல் நலக் குறைவினால் 7.11.2022 காலை10 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிய மிகவும் வருத்தமும், துயரமும் அடைகிறோம்.
சீரிய பண்பாளர் - நம்மிடத்தில் அன்பு பாராட்டி பழகிய பான்மையர். அனைவரிடமும்கூட அப்படியே!
அவரது மறைவு திராவிடர் இயக்கத்திற்கு ஒரு மாபெரும் இழப்பு ஆகும்.
அவரது மறைவால் துயருறும், அவரது குடும்பத்தார் - குறிப்பாக மகன்கள் டாக்டர் துரை. கோ. கருணாநிதி, துரை. கோ. பாண்டியன் (ஊராட்சி மன்றத் தலைவர், வடக்கூர்) குடும்ப உறவினர்கள் அனைவருக்கும் ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment