என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்த நாள் இன்று - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 29, 2022

என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்த நாள் இன்று

தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் 1908ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி நாகர்கோவிலில் பிறந்தார்.

இவர் ஒரு நாடக கொட்டகையில் சோளப்பொரி, கடலை மிட்டாய், முறுக்கு ஆகியவற்றை விற்பனை செய்து வந்தார். அப்பொழுது நாடகத்தின் மீது அதிக ஈர்ப்பு ஏற்பட்டது. மகனின் ஆர்வத்தைக் கண்ட இவருடைய தந்தை இவரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் சேர்த்துவிட்டார். இவர் பல நாடக கம்பெனிகளில் பணியாற்றினார்.

இவர் பல நாடகங்களை எழுதி இயற்றியுள்ளார். இவர் திரையுலகில் கொடிகட்டிப் பறந்தபோதும் நாடகம் மீதுள்ள ஈர்ப்பு இவருக்கு குறையவில்லை. இவரது திரையுலக வாழ்வைத் தொடங்கி வைத்த படம் 'சதிலீலாவதி'. சார்லி சாப்ளினுடன் ஒப்பிட்டுப் பேசியதற்குக் 'சாப்ளினை ஆயிரம் துண்டு போட்டாலும் அதில் ஒரு துண்டுக்குகூட நான் ஈடாக மாட்டேன்' என்று தன்னடக்கத்துடன் கூறினார்.

குறுகிய காலத்தில் சுமார் 150 திரைப் படங்களில் நடித்தவர். 1947ஆம் ஆண்டு சென்னை திருவல்லிக்கேணி நடராஜா கல்விக் கழகம் சார்பில் இவருக்கு 'கலை வாணர்' பட்டம் வழங்கப்பட்டது. 

தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவுப் பிரச்சாரங்களை தன் திரைப் படங்களின் வாயிலாக மக்களிடம் கொண்டு போய் சேர்ந்தவர். நகைச் சுவையில் பகுத்தறிவுப் புரட்சியை ஏற்படுத்திய கலைவாணர் 1957ஆம் ஆண்டு மறைந்தார்.


No comments:

Post a Comment