எழுத்தாளர் இமையத்துக்கு குவெம்பு விருது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 25, 2022

எழுத்தாளர் இமையத்துக்கு குவெம்பு விருது

பெங்களூரு,நவ.25- கடலூர் மாவட்டத்தை சேர்ந்த எழுத்தாள ரும், ஆசிரியருமான‌ இமையம் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நாவல், சிறுகதை, கட்டு ரைகளை எழுதி வருகிறார். தனது முதல் நாவலான‌‘கோவேறு கழு தைகள்' மூலம் தமிழ் இலக்கிய தளத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தினார். இமையத்தின் செடல், செல்லாத பணம், சாவு சோறு, பெத்தவன் உள்ளிட்ட படைப்புகள் வாசகர் களிடையே நல்ல வரவேற்பை பெற்ற‌ன. ஆங்கிலம் மட்டு மல்லாமல் கன்னடம், தெலுங்கு, மலையாளம், பிரெஞ்சு உள்ளிட்ட மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டிருக் கின்றன. ‘செல்லாத பணம்' என்ற நாவலுக்காக 2020ஆம் ஆண்டு சாகித்திய அகாட‌மி விருது இமையத்துக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் கருநாடகாவில் கன்னட தேசிய கவி குவெம்பு பெயரில் அமைக்கப்பட்டுள்ள நினைவு அறக்கட்டளை சார்பாக வழங்கப்படும் ‘குவெம்பு தேசிய விருது' இந்த ஆண்டு எழுத்தாளர் இமையத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 29ஆம் தேதி (குவெம்பு பிறந்த தினம்) நடைபெறும் விழாவில் இமையத் துக்கு இந்த விருதுடன் ரூ. 5 லட்சம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வழங்கப்படும் என குவெம்பு அறக்கட்டளையின் செயலாளர் கடிலால் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

 

No comments:

Post a Comment