சென்னை, நவ. 9- நாடு முழுவ தும் வாக்காளர் பட்டிய லுடன், ஆதாரை இணைக் கும் பணி கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் இதுவரை 55 விழுக்காட்டுக்கும் அதிகமான மக்கள் ஆதார் விவரங்களை அளித்துள்ளனர்.
இப்பணிகள் வரும் 2023 மார்ச் வரை நடை பெறுகிறது. இந்நிலை யில், தமிழ்நாட்டில் வாக் காளர் பட்டியல் திருத்தப் பணிகள் இன்று முதல் தொடங்குகிறது. இதையொட்டி, இன்று வரைவு வாக்காளர் பட் டியல் வெளியாகிறது. சென் னையில் மாநகராட்சி ஆணையர் உட்பட மற்ற மாவட்டங்களில் உள்ள மாவட்ட தேர்தல் அதி காரிகளான ஆட்சியர் கள் இந்த பட்டியலை வெளியிடுகின்றனர்.
இப்பணிகள் இம்மாத இறுதிவரை நடைபெறு கிறது. இந்த காலகட்டத் தில் வாக்காளர் பட்டிய லில் பெயர்களை சேர்க்க மனு அளிக்கலாம். இது தவிர பெயர் நீக்கம், தொகுதிக்குள் முகவரி மாற்றம், முகவரி திருத்தம் உள்ளிட்டவற்றை உரிய படிவங்களை அளித்து மேற்கொள்ளலாம். வாக் காளர் பதிவு அலுவலரி டம் நேரடியாகவோ, தாலுகா அலுவலகங்க ளில் அதிகாரிகளிடமோ, `ஸீஸ்sஜீ’ இணையதளம், செயலி வாயிலாகவோ திருத்தம் மேற்கொள்ள லாம். இதுதவிர, தமிழ் நாட்டில் 4 சனி, ஞாயிறு நாட்களில் சிறப்பு முகாம் கள் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நடத்தப் படுகிறது. அதன்படி, இம்மாதம் 12, 13 மற்றும் 26, 27 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத் தப்படுகிறது. இதே கால கட்டத்தில், வாக்காளர் பட்டியலில் ஆதார் விவ ரங்களை இணைப்பதற் கான மனுக்களையும் அளிக்கலாம் என தேர் தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment