கொங்கு மண்டலத்தில் பதற்றத்தை உருவாக்கி தமிழ்நாட்டில் பா.ஜ.க. காலூன்ற நினைக்கிறது பீட்டர் அல்போன்ஸ் பேட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 27, 2022

கொங்கு மண்டலத்தில் பதற்றத்தை உருவாக்கி தமிழ்நாட்டில் பா.ஜ.க. காலூன்ற நினைக்கிறது பீட்டர் அல்போன்ஸ் பேட்டி

ஈரோடு, நவ. 27- கொங்கு மண்டலத்தில் பதற்றத்தை உருவாக்கி தமிழ்நாட்டில் பா.ஜ.க. காலூன்ற நினைக்கிறது என்று பீட்டர் அல்போன்ஸ் கூறினார்.

தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவரும், காங்கிரஸ் கட்சி மேனாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பீட்டர் அல்போன்ஸ் ஈரோட்டில் 25.11.2022 அன்று செய்தி யாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:- 

ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்கிய பிறகு மக்கள் மத்தியில் ஒரு புது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தற்போதுள்ள சூழலில் தமிழ்நாடு காங்கிரசார் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒற்றுமை காக்க வேண்டும். காசியில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை ஒன்றிய அரசு நடத்துகிறது. ஆனால் தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கு அழைப்பு விடுக்கவில்லை. சிறுபான்மையினர் அதில் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். தமிழர்களை சிறுபான்மை, பெரும்பான்மை என பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேட பா.ஜ.க. முயற்சி செய்கிறது. இங்குள்ள கிறிஸ்தவர்க ளும், இஸ்லாமியர்களும் தமிழர்கள் தான். 

கொங்கு மண் டலத்திலும் மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேட பா.ஜ.க. முயற்சி செய்து வருகிறது. கொங்கு மண்ட லத்தில் பதற்றத்தை உருவாக்கி வளர்ச்சியை குறைத்தால் தமிழ்நாட்டின் வளர்ச்சி குறையும். அதை வைத்து தமிழ்நாட்டில் காலூன்ற பா.ஜ.க. நினைக்கிறது. கெட்ட வாய்ப்பாக தனது கொள்கைகளை மறந்து அ.தி.மு.க., பா.ஜ.க.வை ஆதரிக்கிறது. பிரதமர் மோடி ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வழங்குவேன் என்றார். ஆனால் இப்போதுதான் 75 ஆயிரம் பேருக்கு பணி ஆணை வழங்கியுள்ளார். ஒன்றிய அரசில் மட்டும் 30 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. 

உலகிலேயே படித்த இளைஞர்கள் அதிகம் வேலை இல்லாமல் இருக்கும் நாடு இந்தியா தான். எதிர்க்கட்சித் தலைவர் பதவி அரசமைப்பு அங்கீகாரம் பெற்றது. இதனால் எடப்பாடி பழனிசாமி பொறுப்புடன் பேச வேண்டும். எடப்பாடி பழனிசாமி, வேலுமணி போன்றவர்கள் ஊழல் குற்றச்சாட்டில் நீதிமன்ற தடை உத்தரவு பெற்று செயல்படு கின்றனர் என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 

No comments:

Post a Comment