பஞ்சாபில் பகுத்தறிவாளர் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் அகில இந்திய கருத்தரங்கு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 1, 2022

பஞ்சாபில் பகுத்தறிவாளர் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் அகில இந்திய கருத்தரங்கு

29.10.2022 அன்று பகுத்தறிவாளர் அமைப்பு களின் கூட்டமைப்பு சார்பில் அகில இந்திய கருத்தரங்கு பஞ்சாப் மாநிலம் பர்னாலா நகரில் தர்க்க்ஷீல் பவன் அரங்கில் நடைபெற்றது.

இரண்டு நாள் கருத்தரங்கில் தமிழ்நாட்டில் இருந்து பகுத்தறிவாளர் கழகம் சார்பில் 28 பேராளர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் தமிழர் தலைவர் ஆசிரியர் 

கி வீரமணி அவர்கள் கருத்தரங்கு வெற்றி பெற வாழ்த்துடன்,  FIRAஅமைப்பு அடுத்த கட்ட நடவடிக்கை என்ன செய்ய வேண்டும் என் பதையும் தெரிவித்து வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தார்கள் .

அச்செய்தி கருத்தரங்க பேராளர்களுடைய பலத்த கரவொலிகள் இடையே படிக் கப்பட்டு FIRAசெயலாளரிடம் கருத்தரங்க மேடையில் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment