சென்னை, நவ.25 சென்னையில் பள்ளி வளாகத்தில் ஆர்எஸ்எஸ்-ஸின் பயிற்சி முகாமை நடத்த பள்ளிக் கல்வித் துறை அனுமதி மறுத்துள்ளது. அண்ணா நகரில் உள்ள தனியார் பள்ளியில் வரும் 26 மற்றும் 27-ஆம் தேதிகளில் ஆர்எஸ்எஸ்-ஸின் பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண் ணாமலை, கட்சியின் தேசிய மகளிர் அணிச் செயலாளர் வானதி சீனிவாசன் ஆகியோர் கலந்துகொள்வார்கள் என்று அறிவிக்கப் பட்டது.இந்நிலையில், பள்ளி வளாகங்களில் அரசியல் மற்றும் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை தெளிவுபடுத்தியுள்ளது.
இதனடிப்படையில், ஆர்எஸ்எஸ்-ஸின் பயிற்சி முகாமுக்கு அனுமதி அளிக்க முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment