எடப்பாடிக்கு அமைச்சர் சேகர்பாபு 'கிடுக்கிப்பிடி!' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 4, 2022

எடப்பாடிக்கு அமைச்சர் சேகர்பாபு 'கிடுக்கிப்பிடி!'

சென்னை, நவ.4 பெருமழை பாதிப்பு என்று கூறும் எடப்பாடி பழனிசாமி, மக்கள் மீது அக்கறை கொண்டு, களத்திற்கு வந்து நிவாரணப் பணிகளை மேற் கொண்டாரா?" என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கேள்வி எழுப்பி யுள்ளார்.

சென்னையில் திரு.வி.க. மண்டலத்தில் மழைநீர் தடுப்பு குறித்த ஆய்வுக் கூட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, "இந்த மழைக்கு சென்னை மாநகராட்சியில் ஒரு சொட்டு தண்ணீர்கூட தேங்கி நிற்கவில்லை. தமிழ்நாடு முதலமைச்சர் ஓராண்டுகால தொடர் நட வடிக்கைகளால் இந்தச் சூழ்நிலை உருவாகியுள்ளது. தண்ணீர் தேங் கியிருந்த தாழ்வான பகுதிகளில் இருந்துகூட 90 முதல் 95 சதவீத தண்ணீர் தற்போது அகற்றப்பட் டுள்ளது. இந்தப் பகுதிகளில் வருகின்ற ஆண்டுகளில் தண்ணீர் தேங்காதவாறு போர்க்கால அடிப் படையில் முதலமைச்சர் நட வடிக்கை எடுப்பார்" என்று கூறினார்.

அப்போது அவரிடம் எதிர்க் கட்சித் தலைவர் இபிஎஸ் அறிக் கையைச் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "பெருமழை பாதிப்பு என்று கூறும் எடப்பாடி பழனிசாமி, 3, 4 நாட்கள் மழையின் கால அளவு நீடித்துக்கொண்டிருக்கிறதே... மக்கள் மீது அவர் அக்கறை கொண்டிருந்தால், எங்காவது சுற்றித் திரிந்திருக்க வேண்டும். அவர் எங்காவது வந்தாரா? நிவாரணப் பணிகளை மேற் கொண்டாரா? 10 ஆண்டு காலம் மாநகராட்சியை சீரழித்தார்கள். கமிஷன், கலெக்‌ஷன், கரப்ஷன்... இதை மய்யப்படுத்தி கொசஸ்தலை பேசின் திட்டத்தில் ரூ.3500 கோடி அளவுக்கு டெண்டர் விட்டார்கள். அந்தப் பணிகள் திமுக ஆட்சிப் பொறுப்பேற்கும் வரையில் தொடங்கவில்லை. 700 கி.மீ அளவிலான அந்த பணியில் ஓராண்டில் 40 சதவீத பணிகளை முடித்துள்ளோம்.

மேலும், அவரது அறிக்கையில், 4 ஆண்டுகளில் 176 கி.மீட்டர் அளவுக்கு மழைநீர் கால்வாய் கட்டியுள்ளதாக குறிப்பிட்டுள் ளார். ஆனால், தமிழ்நாடு முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் பொறுப் பேற்ற பிறகு, 200 கி.மீட்டர் நீளத்திற்கு சுமார் ரூ.700 கோடி ரூபாய் அளவிலே திட்டத்தை தீட்டியுள்ளார். அதில், இன்று வ¬ யில், 156 கி.மீட்டர் நீளமுள்ள மழைநீர் கால்வாய் பணிகளை முடித் துள்ளார்" என்று அவர் கூறினார்.


No comments:

Post a Comment