சென்னை, நவ.10 பள்ளிக்கரணையில் உள்ள டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனை பொதுமக்களுக்கு பக்கவாதம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தங்களது மருத்துவமனையிலிருந்து வாக்கத்தான் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது. இந்த வாக்கத்தான் விழிப்புணர்வு நிகழ்வை தாம்பரம் நகர போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் என். குமார், தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு டாக்டர் காமாட்சி நினைவு குழும மருத்துவனைகளின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் டி.ஜி. கோவிந்தராஜன் முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மூத்த மருத்துவர்கள், சிறப்பு மருத்துவ நிபுணர்கள், செவிலியர்கள், துணை மருத்துவ பணியாளர்கள் உட்பட சுமார் 50 பேர் பங்கேற்றனர். இவர்களுடன் டாக்டர் டி.ஜி. சிவரஞ்சனி - இயக்குநர், டாக்டர் கே.எம். ராதாகிருஷ்ணன் - ஆலோசகர், மூத்த நரம்பியல் நிபுணர் டாக்டர் ராஜேஸ்வரி ராமச்சந்திரன் மற்றும் டாக்டர் பிரவீண் சந்தர் ஆகியோரும் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment