புதுடில்லி, நவ. 2 ஆதார்-வாக்காளர் அட்டை இணைப்புக்கு எதிரான மனு தொடர்பாக ஒன்றிய அரசுக்கு, உச்சநீதிமன்றம் தாக்கீது அனுப்பி உள்ளது. ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கருநாட கத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி எஸ்.ஜி. ஒம்பத்கரே என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு விசாரித்தது. மனுவை பரிசீலித்த உச்சநீதிமன்றம், ஆதார் எண் இல்லாதவர்களுக்கு வாக்குரிமையை மறுக் கக்கூடாது. ஆதார் எண் இருப்பவர்களை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க கட்டாயப்படுத்தக் கூடாது என்கிறீர்களா? என கேட்டது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்குரைஞர் சியாம் திவான் ஆஜராகி, அதுதான் மனுதாரரின் நிலைப்பாடு என வாதிட்டார். வாதத்தை பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம், இந்த பொதுநல மனு தொடர்பாக பதில் அளிக்க ஒன்றிய அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட்டது. மேலும் இந்த மனுவை ஆதார் சட்ட திருத்தத்தை எதிர்த்து
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment