தஞ்சை, நவ.18 தஞ்சை மாவட்ட கலந்துரையாடல் கூட்டத் தில் பெருமளவில் சந்தாக்களை சேர்த்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்தநாளில் வழங்குவது என தீர்மானம் நிறைவேற்றம்.
15.11.2022 செவ்வாய் அன்று மாலை 6:30 மணி அளவில் தஞ்சாவூர் கீழ ராஜவீதி பெரியார் இல்லத்தில் தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் நடை பெற்றது. தஞ்சை மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் தலைமையேற்று உரையாற்றினார். கழகப் பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், மாநில ப.க. ஊடகப்பிரிவு தலைவர் மா.அழகிரிசாமி, தஞ்சை மண்டல தலைவர் மு.அய்யனார், தஞ்சை மாவட்ட செயலாளர் அ.அருணகிரி ஆகியோர் முன்னிலையேற்று உரையாற்றினார்.
தஞ்சை மண்டல இளைஞரணி செயலாளர் முனைவர் வே ராஜவேல், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன், மாவட்ட இணைச் செயலாளர் வடசேரி தீ.வ.ஞானசிகாமணி, மாவட்ட துணைச் செயலாளர் அ.உத் திராபதி, தஞ்சை தெற்கு ஒன்றிய தலைவர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம், திருவையாறு ஒன்றிய தலைவர் ச.கண்ணன், திருவையாறு ஒன்றிய செயலாளர் துரை.ஸ்டாலின், தஞ்சை மாநகர தலைவர் பா.நரேந்திரன், தஞ்சை மாநகர செயலாளர் கரந்தை அ.டேவிட், மண்டல மகளிர் அணி செயலாளர் சி.கலைச்செல்வி, மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் ச.சந்துரு, மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் ஆட்டோ செ.ஏகாம்பரம், மாவட்ட ப.க. துணைத் தலைவர் பெரியார் கண்ணன், தஞ்சை மாநகர இளைஞரணி துணைத் தலைவர் அ.பெரியார் செல்வம், மாவட்ட இளைஞரணி துணை தலைவர் பா.விஜயகுமார், பெரியார் மணியம்மை பல்கலைக் கழக மாணவர் நிலவன், விடுதலை வாசகர் வட்ட பொறுப் பாளர் தங்க.வெற்றிவேந்தன், சிங்கப்பூர் தங்க மாளிகை உரிமையாளர் சந்திரசேகரன், பகுத்தறிவாளர் கழகம் ஜெயராமன், சி.நாகநாதன் மற்றும் கழக தோழர்கள் பங் கேற்றனர்.
தீர்மானங்கள்
தீர்மானம் எண் 1:
இரங்கல் தீர்மானம்
திருவையாறு பெரியார் பெருந்தொண்டர் மு.வடிவேல் அவர்களின் வாழ்விணையர் செண்பகவள்ளி, தமிழ்நாடு அரசின் ‘சமூக நீதிக்கான பெரியார் விருது' பெற்ற மேனாள் தமிழ்நாடு அரசு ஏவுனர் துரை.கோவிந்தராஜன் ஆகியோரது மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும் வீர வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் எண் 2:
தஞ்சை மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் நடைபெற்ற பெரியார் 1000 வினா -விடை போட்டியில் பங்கு பெற்ற அனைத்துப் பள்ளிகளுக்கும் தந்தை பெரியார் படத்தினையும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளையும் குறித்த நேரத்தில் வழங்குவது என முடிவு செய்யப்படுகிறது.
தீர்மானம் எண் 3:
தலைமைக் கழக அறிவிப்பின்படி நவம்பர் 27 அன்று தஞ்சை மாநகரில் ஜாதி ஒழிப்புப் போராளிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் எண் 4:
60,000 ‘விடுதலை' சந்தா சேர்க்கும் இரண்டாம் கட்ட பணியில் தஞ்சை மாவட்டத்தின் சார்பில் பொதுமக்கள் அரசியல் பிரமுகர்கள், வணிக பெருமக்கள் என அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து, பெருமளவில் ‘விடுதலை' சந்தாக்களை சேர்த்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்தநாள் பரிசாக வழங்குவது என தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் எண் 5:
டிசம்பர்-2 சுயமரியாதை நாள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90 ஆவது பிறந்தநாள் விழாவினை தஞ்சை மாவட்டத்தின் அனைத்து ஒன்றியங்களிலும், தஞ்சை மாநகரில் மூன்று இடங்களிலும் சிறப்பாக கொண்டாடுவது என முடிவு செய்யப்படுகிறது. டிசம்பர் 2 அன்று சென்னையில் நடைபெறும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்த நாள் நிகழ்வில் குடும்பத்தோடு அனைத்துத் தோழர்களும் பங்கேற்று சிறப்பிப்பது என தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் எண் 6:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்கும் தஞ்சாவூர் வழக்குரைஞர்கள் சங்கம் நடத்தும் சட்ட நாள் விழா கருத்தரங்கில் (18.11.2022) கழகத் தோழர்கள் அனைவரும் பெருமளவில் பங்கேற்பது என முடிவு செய்யப்படுகிறது.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment