புதுடில்லி, நவ. 28 ஜனநாயகத்தில் எந்த ஒரு அமைப்பும் பூரணமானது அல்ல; கொலீஜியம் அதற்கு விதிவிலக்கல்ல _என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறினார்.
“நான் உள்பட அனைத்து கொலீஜியத் தின் நீதிபதிகளும், அரசமைப்பை செயல் படுத்தும் விசுவாசமான வீரர்கள்” என்று தலைமை நீதிபதி கூறினார்.அரசமைப்பு நாள் கொண்டாட்டத்தையொட்டி டில்லியில் உச்ச நீதிமன்ற வழக்குரை ஞர்கள் பார் கூட்டமைப்பு சார்பில் விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “ஜனநாயகத்தில் எந்த ஒரு அமைப்பும் பூரணமானது அல்லது. அதற்கு கொலீஜியம் முறை மட்டும் விதிவிலக்கா என்ன? “நான் உள்பட அனைத்து கொலீஜியத்தின் நீதிபதிகளும், அரச மைப்பை செயல்படுத்தும் விசுவாசமான வீரர்கள்”, ஆனால் கருத்து வேறுபாடு களோ, சிக்கல்களோ ஏற்படும்போது நாம் அந்த அமைப்புக்கு உள்பட்டே அதற்கு தீர்வு காண்பது அவசியம் என கூறினார்.
மேலும், நீதிபதிகள் அரசியல் சாச னத்தை அமல்படுத்தும் நேர்மையான வீரர்கள். கொலீஜியம் முறையில் சீர்தி ருத்தங்களைக் கொண்டுவருவதால் மட் டுமோ அல்லது நீதிபதிகளின் ஊதியத்தை உயர்த்துவதால் மட்டுமோ நீதித்துறைக்கு நல்லவர்களைக் கொண்டுவந்து விட முடியாது. நீங்கள் எவ்வளவுதான் உயர்ந்த ஊதியத்தை நீதிபதிகளுக்குக் கொடுத்தாலும் மூத்த பிரபல வழக் குரைஞர்கள் ஒருநாள் வருவாயில் அது ஒரு சிறு பகுதியாகத் தான் இருக்கும் என ஒன்றியஅரசுக்கு சுட்டிக்காட்டியவர், அதையும் மீறி ஒரு வழக்குரைஞர் நீதிபதி யாவது என்பது மனசாட்சியின் குரலு டன் இயைந்து போவது மக்கள் சேவை யில் அவருக்கு உள்ள அர்ப்பணிப்புதான் என்றார்.
கொலீஜியம் சர்ச்சைக்களுக்கு விடை என்னவெனில் நாம், எப்படி முன் மாதிரியாக திகழ்ந்து இன்றைய இளைஞர் களின் கனவிற்கு வித்திடுகிறோம் என்ப தில்தான் உள்ளது என்றவர், நீதிபதிகளின் ஓய்வுக் காலத்திற்குப் பின்னரும் கூட அவர்களிடமிருந்து பிரித்து எடுக்க முடியாத மனநிறைவு ஏற்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
No comments:
Post a Comment