பேராசிரியர் மு. இளங்கோவனுக்குத் தமிழ்நாடு அரசின் தூய தமிழ் ஊடக விருது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 10, 2022

பேராசிரியர் மு. இளங்கோவனுக்குத் தமிழ்நாடு அரசின் தூய தமிழ் ஊடக விருது!

சென்னை, நவ. 10- தமிழ்நாடு அரசின் செந் தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் ஆண்டுதோறும் ஊடகத்துறையில் சிறப்பாகத் தமிழ்ப்பணி செய்பவர்களுக்குத் தூய தமிழ் ஊடக விருதினை வழங்கி வருகின்றது.

புதுவைப் பேராசிரியர் மு.இளங்கோவ னுக்கு 2021 ஆம் ஆண்டுக்கான காட்சித்துறை ஊடக விருது சென்னையில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது. 

தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறைச் செயலர் முனைவர் ம.சு. சண்முகம், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் ம.இராசேந்திரன், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் ந.அருள், அகர முதலித் திட்டத்தின் இயக்குநர் கோ.விசய ராகவன், கணினி அறிஞர் மதன் கார்க்கி, பேராசிரியர் கு.அரசேந்திரன், விஜி.பி. சந் தோசம் ஆகியோர் கலந்துகொண்ட விழா வில் தூய தமிழ் ஊடக விருது மு.இளங் கோவனுக்கு வழங்கப்பட்டது. இந்த விருது அய்ம்பதாயிரம் ரூபாய் ரொக்கமும், தங்கப் பதக்கமும், தகுதியுரையும் அடங்கியது ஆகும்.

தமிழ்நாட்டின் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களிலும், தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் பிறநாடுகளிலும் இணையத் தமிழ்ப் பயிலரங்குகளை நடத்தி, தமிழ் இணையத்துறையில் விழிப்புணர்ச்சியை ஏற் படுத்திய மு. இளங்கோவன் தம் வலைப்பதிவு வழியாக (http://muelangovan.blogspot.com)  ஆயிரத்து அய்ந்நூற்றுக்கும் மேற்பட்ட தூய தமிழ்க் கட்டுரைகளைப்  பல்லாயிரம் பக்கங்களில் எழுதியுள்ளார். இதனை உலக அளவில் 7,95,820 பேர் பார்வையிட்டு, பயன் படுத்தி வருகின்றனர். 

இக்கட்டுரைகளில் தமிழ்நாட்டு மக்கள் அறிந்துகொள்ள வேண்டிய மூத்த தமிழறி ஞர்களின் வாழ்க்கை வரலாறு அடங்கி உள்ளன.  

தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தின் சிறப்பினை உலக அளவில் கொண்டுசேர்க்கும் முயற்சியில் உலகத் தொல்காப்பிய மன்றம் கண்டு, அதற் கெனத் தனி இணையதளம் (https://tholkappiyam.org) உருவாக்கி அதில் தொல் காப்பியம் குறித்த அனைத்து அரிய செய்தி களையும் மு.இளங்கோவன் பதிவேற்றி யுள்ளார். 

மேலும் தமிழ்நாட்டில் உள்ள மூத்த தமிழறிஞர்களைத் தொல்காப்பியம் குறித்து உரையாற்றச் செய்து இதுவரை அய்ம்ப துக்கும் மேற்பட்ட காணொலிகளை இணை யத்தில் பதிவேற்றம் செய்துள்ளார் (https://www.youtube.com/channel/UCH39TKckc3dl8Bi42kDpKnw/videos) இதனை உலக அளவில் 4, 51,109 பேர் பார்வையிட்டு, பயன்பெற்றுள்ளனர். 

தமிழ் இசைக்குத் தொண்டாற்றிய பண் ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரே சனார், யாழ் நூல் ஆசிரியர் விபுலாநந்த அடிகளார் ஆகியோரின் வாழ்வியலையும், பணிகளையும் ஆராய்ந்து, ஆவணப்பட மாக்கி, உலகத் தமிழர்களின் பாராட்டினைப் பெற்றுவரும் மு. இளங்கோவன் இணைய ஊடகம் வழியாக ஆற்றிவரும் பணியைப் பாராட்டிச் சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு 2021ஆம் ஆண்டுக்கான தூய தமிழ் ஊடக விருதினை அளித்துள்ளது.

No comments:

Post a Comment