இடஒதுக்கீட்டில் உயர் ஜாதியினருக்கு ஒரு நீதி - மற்றவர்களுக்கு வேறு நீதியா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 23, 2022

இடஒதுக்கீட்டில் உயர் ஜாதியினருக்கு ஒரு நீதி - மற்றவர்களுக்கு வேறு நீதியா?

மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

மதுரை, நவ.23 உயர் ஜாதி யினருக்கு ரூ.8 லட்சம் வரை ஆண்டு வருமானம் இருந்தால் இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகை களை பெற முடியும். ஆனால், பிற வகுப்பினருக்கு ரூ.2லு லட்சம் ஆண்டு வருமானம் இருந்தாலே சலுகைகளை இழக்கும் நிலை உள்ளதாக தொடர்ந்த வழக்கில் ஒன்றிய நிதி அமைச்சகம் பதில் அளிக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.  

விருதுநகர் மாவட்டம் சிறீவில் லிபுத்தூரில் குன்னூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்த தாவது:- நான் 82 வயது மூத்த குடிமகன். தற்போது தி.மு.க.வில் உள்ளேன். இந்திக்கு எதிரான போராட்டம், இலங்கைத் தமிழர் களுக்கு ஆதரவாக போராடியது, விவசாய பாசனத்திற்கு இலவச மின்சாரம் கோரியது என பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று உள்ளேன். இதற்காக என் வாழ்நாளில் சுமார் 250 நாட்கள் சிறைவாசம் அனுப வித்து இருக்கிறேன். தற்போது அரசமைப்புச் சட்டத்தின் வரை வுகள் இதர பிற்படுத்தப்பட்டோர்,  தாழ்த்தப்பட்ட, பழங்குடியின  சமூக பிரிவினருக்கு அரசு வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கு வதற்கும், கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்கும் அதி காரம் அளித்துள்ளது.

இந்தநிலையில் கடந்த 2019-ஆம் ஆண்டில் ரூ.8 லட்சத்திற்கு குறைவான ஆண்டு வருமானம் உள்ள உயர் ஜாதியினர், கல்வி, வேலைவாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீடு பெறும் வகையில் ஒன்றிய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்தது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என சமீபத்தில் தீர்ப்பளித்தது.

 மொத்த வருவாயை நிர்ணயம் செய்து இடஒதுக்கீடு பெறுவ தற்காக குறிப்பிட்ட பிரிவினரை பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினராக வகைப்படுத்த அரசு முடிவு செய்யும் போது,​அதே அளவுகோலை மற்ற அனைத்து பிரிவினருக்கும் பயன்படுத்த வேண் டும். இந்த சராசரியை கையாள ஒன்றிய அரசு தவறிவிட்டது. எனவே வருமான வரி நிர்ணய முரண்பாடுகளை தவிர்க்க, ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தை ஆண்டு வருமானமாக கொண்டவர்கள் வரி செலுத்த தகுதியுடையவர்கள் என்று நிர்ணயம் செய்ததற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ் வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் முன்பு  விசா ரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு குறித்து ஒன்றிய நிதித்துறை செயலாளர், ஒன்றிய சட்டம் மற்றும் நீதித்துறை செயலாளர், பென்சன் மற்றும் பொது குறைதீர்துறை செயலாளர் ஆகியோர் பதில் அளிக்க தாக்கீது அனுப்பும்படி நீதிபதிகள் உத்தர விட்டனர். 

விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.


No comments:

Post a Comment